டிக்டாக் சூர்யா பேச்சால் கொதித்து போன மசினக்குடி மக்கள் !

0

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் டயரில் தீ வைத்து காட்டு யானையின் மீது வீசப்பட்டத்தில், அதன் காதில் தீ பிடித்து படுகாயம் அடைந்து உயிரிழந்தது.  

டிக்டாக் சூர்யா பேச்சு
யானைக்கு தீ வைக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். 

சமூக வலைதளங்களில் பலரும் யானையை தீ வைத்து காயப்படுத்தியவர்களுக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்தனர். 

ஆரோக்கியமற்ற உணவுகள் யாவை?

இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரசாத் (36) மற்றும் ரேமண்ட் டீன் (28) ஆகியோரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

காட்டு யானையை விரட்ட தீ வைத்து துணியை அதன் மீது வீசியதை விசாரணையில் ஓப்புக் கொண்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள ரிக்கி ராயனை வனத்துறை தேடி வருகின்றனர். 

இந்நிலையில் கைதான ரேமண்ட் டீன் மற்றும் அவரது அண்ணன் ரிக்கி ரேயான் ஆகியோர் 3 விடுதிகளை நடத்தி வந்தனர்.

இது விதி மீறிய கட்டிடத்தில் இருந்ததால் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்தனன் மற்றும் மசினகுடி ஊராட்சி செயலாளர் கிரண் ஆகியோர் போலிஸ் பாதுகாப்புடன் அந்த விடுதிக்கு சீல் வைத்தனர். 

கொதித்து போன மசினக்குடி மக்கள் 

இது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் திருப்பூரை சேர்ந்த டிக்-டாக் சூர்யா, சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். 

இவர் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி.

இவர் சமூக வலைதளமான டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர்.

இவரது டிக்டாக் வீடியோக்களால் ‘ரவுடி பேபி’ சூர்யா என அழைக்கப்பட்டார். நாளடைவில் அதனையே தனது பெயராக மாற்றினார் சூர்யா. 

அந்த வீடியோவில், மசினகுடி மக்களை கொச்சை படுத்தி  பேசியதுடன். அந்த ஊருக்கு போக்குவரத்து, குடிநீர், பால் உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும் என பேசி இருந்தார். 

இந்தியாவிடம் மட்டும் தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இருக்கிறதா?

டிக்டாக் சூர்யா பேச்சால் கொதித்து போன மசினக்குடி மக்கள் !

மத ரீதியாக மோதல்களை உருவாக்கும் விதத்திலும் அவருடைய பேச்சு அமைந்திருந்தாக புகார் எழுந்தது,  இந்த வீடியோவை பார்த்த மசினகுடி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மாவனல்ல பகுதியில் வசித்த ஒருவர் செய்த செயலுக்கு ஒட்டு மொத்தமாக மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய சூர்யாவிற்கு கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கிரிஸ்பி மசாலா டோஸ்ட் செய்வது எப்படி?

இதனிடையே மசினகுடி ஊர் மக்கள் குறித்து அவதூறு பரப்பிய சூர்யா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)