ரஜினி தொடங்கிய ஆன்மீக கட்சி - திடீர் அறிவிப்பு !

0
ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நடிகர் ரஜினி காந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
ரஜினி தொடங்கிய ஆன்மீக கட்சி
சென்னையில், நேற்று மன்ற நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில், தீவிரமாக களமிறங்க ஆயத்தமாகும்படி, மன்றத்தினருக்கு உத்தரவிட்டுள்ள அவர், கூட்டணி அமைப்பது குறித்து, பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். 

அற்புதம்.. அதிசயம் .. நிகழும் என்று கூறியுள்ளார். இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒருவர் கூறுகையில், அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினி கேட்டார். 

பெரும்பான்மையான நிர்வாகிகள், தனிக்கட்சி துவங்கி போட்டியிட்டால், நினைக்கும் மாற்றத்தை கொண்டு வரலாம் என்றோம். 
சன்னி லியோன் வாழ்க்கை
ஐந்து மண்டலங்களில், ஹெலிகாப்டர் மூலம் ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டும் பிரசாரம் செய்தால் போதும் என, அவரிடம் கூறினோம். 'நாம் தனியாக போட்டியிட்டால், எத்தனை சதவீதம் ஓட்டுக்கள் பெறலாம்' என, நிர்வாகிகளிடம் ரஜினி கேட்டார். 
ரஜினி தொடங்கிய ஆன்மீக கட்சி
அதற்கு, 2014ம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 22 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. 2019 லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 18 சதவீதம் ஓட்டுக்களை, அ.தி.மு.க., பெற்றது.

தற்போதைய சூழலில், இரு கட்சிகளும் கூட்டணி பலத்துடன் உள்ளன. எனவே, நாமும் கூட்டணி அமைக்கலாம். பா.ஜ., காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள், நம்முடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன. 
பா.ம.க., - தே.மு.தி.க., மக்கள் நீதி மையம், அ.ம.மு.க., புதிய தமிழகம் போன்ற மாநில கட்சிகளும் தயாராக உள்ளன. எனவே, இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, வலுவான கூட்டணியை அமைக்க முடியும் என, அவரிடம் உறுதி அளித்தோம். 

கட்சியின் பெயர் கூட ’ஆன்மீக ஜனதா கட்சி’ என முடிவாகி விட்டது’’ என்கிறார் அவர்.  ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings