முட்டை விலை உயர்வுக்கு குளிர் காரணமா?

0

வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர் மற்றும் தமிழகத்தில் தேவை அதிகரித்துள்ளதால் மீண்டும் முட்டை விலை உயரத்தொடங்கியுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

முட்டை விலை உயர்வு
கடந்த வாரங்களில் 4 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 4 ரூபாய் 40 காசாக உயர்ந்துள்ளது நாமக்கல் வட்டாரத்திலிருந்து தினமும் 50 லட்சம் முட்டைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. கடும் குளிர் நிலவுவதும் முட்டை விற்பனை அதிகரித்து விலை உயர்வுக்குக் காரணம் என்கின்றனர் கோழிப் பண்ணையாளர்கள். 

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. 

மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் கேரள மாநிலத்திற்கும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்குப் போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, முட்டையின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டையின் கொள்முதல் விலை அதிகரித்தால் சந்தையில் வியாபாரம் குறைய வாய்ப்புள்ளதாக சிறு தொழில் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)