ரஜினிகாந்த் கட்சியின் சின்னம் ஆட்டோ ! Auto symbol of Rajini's party





ரஜினிகாந்த் கட்சியின் சின்னம் ஆட்டோ ! Auto symbol of Rajini's party

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து கடந்த மாதம் 30-ந் தேதி ரஜினி👈 ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் கட்சி தொடங்குவது உறுதி. டிசம்பர் 31-ந் தேதி இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் கட்சியின் சின்னம் ஆட்டோ !
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி, மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் ஆகியோரை நியமித்தார்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்த 👉ரஜினி “மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை” என்ற கோ‌ஷத்தை வெளியிட்டார்.

இதற்கிடையே ரஜினி கட்சியை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இதற்காக மன்ற நிர்வாகிகள் சிலரை ரஜினி டெல்லிக்கு அனுப்பி இருந்தார். 

அவர்கள் வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் ரஜினி கட்சி தொடர்பான தகவல்கள்👈, ஆவணங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டது. 

நேற்று தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 9 கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 

கமல்ஹாசனின் கட்சிக்கு புதுச்சேரியில் “டார்ச் லைட்” சின்னம் கிடைத்துள்ளது. டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு “பிர‌ஷர் குக்கர்” சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரஜினி கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் அறிவித்த கட்சிகள் மற்றும் சின்னங்கள் பட்டியல் வரிசையில் உள்ள 9 கட்சிகளில் 8-வது கட்சியாக “மக்கள் சேவை கட்சி” என்ற கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளது.
திண்டுக்கல் பிரியாணி செய்வது எப்படி? 

எர்ணாவூர் பாலாஜி நகரை தலைமை இடமாக கொண்டு இந்த கட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலில் அந்த கட்சியை பதிவு செய்தது யார் என்பது தெரியாமல் இருந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ரஜினி பதிவு செய்துள்ள கட்சி தான் “மக்கள் சேவை கட்சி” என்று தெரிய வந்துள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில் அந்த கட்சியின் நிறுவனராக ரஜினிகாந்த்தின் பெயர் இடம் பெற்றிருப்பதும் உறுதி படுத்தப்பட்டுள்ளது. 

ரஜினி கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் “மக்கள் சேவை கட்சி” என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் மூலம் தெரிய வந்திருக்கிறது. ரஜினி கட்சியின் பெயர் எம்.எஸ்.கே. என்று அழைக்கப்படும்.

ரஜினிகாந்த் கட்சியின் சின்னம் ஆட்டோ

இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேர்தல் ஆணையம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி வெளியிட்ட பட்டியலில் எர்ணாவூரை தலைமையிடமாக கொண்டு “அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்” என்ற கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியானது. 
பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதில் மூங்கில் பாட்டில் !

அந்த கட்சியை “மக்கள் சேவை கட்சி” என்று பெயர் மாற்றம் செய்வதற்கு 2½ மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவை ஏற்றுக் கொண்டு கட்சியின் பெயரை “மக்கள் சேவை கட்சி” என்று மாற்றுவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 

234 தொகுதிகளிலும் இந்த கட்சி போட்டியிடும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினியின் இந்த புதிய கட்சிக்கு தேர்தல் சின்னத்தையும் தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தல் சின்னமாக “ஆட்டோ” தேர்வு செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. 

ரஜினிகாந்த் கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி

ரஜினி தரப்பில் “பாபாவின் முத்திரை” சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து “ஆட்டோ” சின்னத்தை ரஜினி கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. என்றாலும் “ஆட்டோ” சின்னம் கிடைத்திருப்பது ரஜினிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் திருப்தியை கொடுத்துள்ளது. 

பள்ளி கூடத்துக்கு படிக்க வந்த பாம்பு - பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை !

ரஜினி வருகிற 31-ந் தேதி தான் கட்சி பெயரை வெளியிட இருந்த நிலையில் அவரது கட்சி பெயர் “மக்கள் சேவை கட்சி” என்று தெரிந்திருப்பதால் ரசிகர்கள் அதை வரவேற்றுள்ளனர். 

கட்சி பெயரையும், சின்னத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)