அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை !

0

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திறக்ககோரி பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பள்ளிகள்👈 அடுத்த 5 மாதங்களுக்கு திறக்க வாய்ப்புக்கள் இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை !
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. தளர்வுகள் காரணமாக கல்லூரிகள் திறக்கப்பட நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் ஜனவரியில்👈 பள்ளிகள் திறக்க வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பள்ளிகள் திறக்க வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விட்ட நிலையில் திறப்பு பற்றி ஆலோசனை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் ஐஐடி கல்லூரி திறக்கப்பட்டு ஒரு வாரகாலத்திற்குள், 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கல்லூரி மாணவர்களே எளிதாக பாதிப்புக்கு உள்ளாகும் போது பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் அவர்கள் எளிதில் கொரோனா👈 தொற்று பரவும் வாய்ப்புக்கள் ஏற்படும் என பலரும் கூறுகின்றனர்.

இந்நிலையில் டிசம்பர் மாதம் நடத்தப்படும் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், “1 முதல் 9ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடத்திட்டங்களும், 10,11, 12ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

கொரோனா👈 பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 5 மாதங்களுக்கும் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை பள்ளிக்கல்வி துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)