இந்திய எல்லையில் சீனா உருவாக்கிய 3 கிராமங்கள் !

0

இந்திய - சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையில் சீனா உருவாக்கிய 3 கிராமங்கள் !

இந்த மோதலில் இரு நாட்டிற்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பதற்றம் அதிகரித்து பரபரப்பு ஏற்பட்டது. 

சீனாவின் பண்டைய ராணுவ தளபதி சுன் ஜூ, இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 'The Art of War' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார், 

ஆணுக்கு தைராய்டு வருமா? அறிகுறிகள் என்ன?

"எதிரிகளிடம் சண்டையிடாமல் தோற்கடிப்பதே சிறந்த போர்க் கலையாகும்." இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை சீனர்கள் இன்றும் பின்பற்றுகின்றனர். 

தற்போது நடந்து வரும் எல்லை பதற்றத்தைப் புரிந்து கொள்ள, 'சிறந்த போர் கலை' என்ற இந்த உத்தியையும் மனதில் கொள்வது அவசியமாகும்.

இந்தியா குறிப்பிட்ட பகுதி வரை எனது எல்லை எனக் கூறும். சீனா அதற்கு மாறாக ஒரு பகுதியைத் தனது எல்லை எனக் கூறும். 

பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில், இந்த எல்லை திட்டவட்டமாக வரையறுக்கப்பட வில்லை. 

இந்திய எல்லையில் சீனா உருவாக்கிய 3 கிராமங்கள் !

இந்த எல்லையில் கிட்டத்தட்ட இருநாடுகளுக்கும் தீர்க்கப்படாத சுமார் 23 முரண்பாடும் எல்லைத் தகராறுகள் நீடித்து வருகின்றன. 

இந்த நிலையில் அருணாச்சல பிரதேசம் அருகே சீனா 3 புதிய கிராமங்களை கட்டமைத்து வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று  தகவல் வெளியிட்டுள்ளது. 

மூன்று நாடுகளின் முக்கோண எல்லைப்பகுதியில் சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.  

கர்ப்பிணிப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை !

இந்தியா- சீனா- பூட்டான் எல்லையில் புதிதாக முளைத்துள்ள 3 கிராமங்களின் படங்களை என்.டி.டி.வி. தனது பிரத்யேக ஆய்வின் மூலம் வெளிப்படுத்தி யுள்ளது.

மேற்கு அருணாச்சல பிரதேசத்தின் பும்லா பாஸ் பகுதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் 3 கிராமங்களை சீனா உருவாக்கி யிருப்பதாக என்.டி.டி.வி. அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்துள்ளது. 

இதனிடையே அருணாச்சல பிரதேசம் அருகே உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத் வரை ரயில் பாதை அமைக்கும் பணியில் சீனா ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

இப்போது புதிதாக கிராமங்களையும் உருவாக்கி அவைகளை இணைக்கும் சாலைகளும் அமைக்கப் பட்டிருப்பதாக என்.டி.டி.வி. தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையில் சீனா உருவாக்கிய 3 கிராமங்கள் !

மேலும், கடந்த காலங்களில் பறவை வடிவில் சேட்டிலைட் மூலம் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கும் இப்போது அங்கு எடுக்கப்பட்டுள்ள படத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் இந்த நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் ! 

மேற்கு அருணாச்சல் எல்லையை ஒட்டி சீனா உருவாக்கியுள்ள 3 புதிய கிராமங்களிலும் இணைய வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்டவைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளன. 

எல்லைப் பிரச்சனை விவகாரத்தில் சீனா தொடர்ந்து தந்திரமாக செயல்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)