கேட்டராக்ட் என்றால் என்ன?

0
* நமது கண்களில் உள்ள இயற்கையான லென்ஸ் மங்கலான தோற்றத்தை உணர்வது அல்லது தெளிவான தன்மையை இழப்பது கேட்டராக்ட் எனப்படுகிறது. தமிழில் கேட்டராக்ட் என்பது புரை என்று சொல்லப் படுகிறது. 
கேட்டராக்ட் என்றால் என்ன?
கேட்டராக்ட் என்பது வயோதிகம், பரம்பரை மூலக்கூறியல் குறைபாடு, விபத்துகள், நீரிழிவு போன்ற காரணங்களால் கண்ணில் உள்ள லென்ஸ் ஒளி ஊடுருவும் தன்மையை இழப்பதன் காரணமாக ஏற்படும் நிலை.

இதன் காரணமாக லென்ஸில் ஒரு படலம் சூழ்ந்தது போன்ற நிலையில் பார்வை தெளிவாக இல்லாமல் மங்கலாகத் தெரிகிறது. 

நாளடைவில் இந்நிலை அதிகரித்து நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை தடுத்து நிறுத்துவதன் காரணமாக முழுமையான பார்வை யிழப்பிற்க்கும் காரணமாகிறது. 

இந்நிலையே கேட்டராக்ட் எனப்படுகிறது. கேட்டராக்ட் இரண்டு கண்களையுமே பாதிக்கும் என்றாலும் (Although cataracts can affect both eyes) பாதிப்பின் அளவு மற்றும் நிலை இரண்டு கண்களுக்கிடையே வேறுபடலாம். 

கேட்டராக்ட் ஒருவரது கண்ணில் தோன்றிய நிலையில் அது இயல்பான கண் நலத்திற்க்கு ஆபத்தானதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. 

ஆனால் லென்ஸின் மீது படரும் படலமானது லென்ஸை முழுமையாக மறைத்து, வெள்ளை நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் தோற்றமளிக்கும் நிலையே ”முற்றிய புரை” (matured cataract) எனப்படுகிறது.
முற்றிய புரை கண் பார்வையிழப்பிற்க்கு காரணமாகிறது (Acute pneumonia causes vision loss). அதிகமான கண் வலி, தலைவலி மற்றும் கண்களில் வீக்கம் போன்ற பிரச்சிச்னைகளுக்கும் காரணமாகிறது. 

எனவே முற்றிய புரையை விரைவில் ஆபரேஷன் மூலம் அகற்றுவது சிறந்தது. கேட்டராக்ட் பொதுவாக அதிகமாக வயதானவர்களுக்கு வரக்கூடிய பிரச்சினை என்றாலும் எல்லா வயதினரையும் இது பாதிக்கிற்து என்பதே உணமை.

சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமான அளவிற்க்கு இருக்கும் வகையில் பணியாற்றுபவர்களுக்கு விரைவில் புரை வளருகிறது.
கேட்டராக்ட் என்றால் என்ன?
நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கும் (For people with diabetes), கண்களில் ஏதேனும் நோய்த்தொற்றின் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருந்தாலும்,

பரம்பரை மூலக்கூறியல் காரணங்களாலும், நாம் பிறப்பதற்க்கு முன்பு நமது தாய்க்கு பிரசவகாலத்தில் ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மை நோய் ஏற்ப்பட்டிருந்தாலும்,

நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகித்திருந்தாலும், ஒருவருக்கு கிட்டப்பார்வைக்கோளாறு நீண்ட காலம் இருந்திருந்தாலும், கண்களில் காயம் ஏதேனும் ஏற்பட்டிருந்தாலும் (Even if there is an injury to the eyes),

கண் சார்ந்த மற்ற நோய்கள் ஏதேனும் இருந்தாலும் (Any other eye related diseases),

நம் உடலில் பல்வேறு உயிர் வேதியியல் மாற்றங்கள் காரணமாகவும் கேட்டராக்ட் உருவாகலாம் (Cataracts can also develop due to various biochemical changes in our body.).
புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் செலினியம் போன்ற நுண்ணிய சத்துக்குறைபாடு இருந்தாலும் கேட்டராக்ட் உருவாகலாம்.

புகை பிடிப்பதாலும் இளம் வயதினர் உட்பட யாருக்கு வேண்டுமானாலும் கண் புரை வளரலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)