கேட்டராக்ட்டுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

0

அ. ஆபரேஷன் இல்லாத சிகிச்சை: கேட்டராக்ட் வராமல் தடுப்பதற்க்கோ அல்லது கேட்டராக்ட் வருவதற்க்கான காரணத்தை அகற்றுவதற்க்கோ நிரூபிக்கப்பட்ட மருந்துகள் ஏதும் இல்லை. 

கேட்டராக்ட்டுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
ஒரு வேளை கேட்டாராக்ட் ஆரம்ப நிலையில் அல்லது லேசானதாக இருந்தால் கண்ணாடிகளை மாற்றிக் கொள்வது ஒரு வேளை உதவியாக இருக்கலாம். ஆனால் மற்ற சூழ்நிலைகளில் ஆபரேஷன் மட்டுமே சரியான சிகிச்சை ஆகும்.

ஆ. கேட்டராக்ட் ஆபரேஷன் சிகிச்சை:

நமது கண்ணில் உள்ள இயற்கையான புரையால் மறைக்கப்பட்ட லென்ஸை நீக்குவதே கேட்டராக்ட் ஆபரேஷன் சிகிச்சை ஆகும். 
ஆனால் தற்போதைய ஆபரேஷன் முறையில் புரையால் மறைக்கப்பட்ட லென்ஸை ஆபரேஷன் மூலம் அகற்றி விட்டு அதற்குப்பதிலாக 

இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ் (Intraocular Lens) எனப்படும் கண்ணுக்குள் பொருத்தப்படும் ஒரு செயற்கை லென்ஸ் பொருத்தப் படுகிறது.

எப்போது கேட்டராக்ட் ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்?

ஒருவரது கண்ணின் உருவாகியுள்ள கண் புரை அவரது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் அல்லது 

அவரது தினசரி வேலைகளை செய்வதற்க்குக் கூட சிரமமாக இருக்கின்ற நிலையில் அவருக்கு கேட்டராக்ட் ஆபரேஷன் அறிவுறுத்தப் படுகிறது.
கேட்டராக்ட்டுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்பு என்ன வென்றால், இன்றைய விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியடைந்த நிலையில், கண்புரை முற்ற வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஒரு வேளை கண் புரை முற்றியிருந்தால், அல்லது கண் புரை கண்ணின் உள்ளே வேறு ஏதேனும் ஆபத்தான சிக்கலை ஏற்படுத்தியிருந்தால், 

(ஒரு வேளை அப்படி ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பிருந்தால்) அப்போது ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

சில நேரங்களில் நோயாளிக்கு விழித்திரையில் ஏதேனும் ஆபத்தான அல்லது சிக்கலான பிரச்சினை ஏதும் இருந்தால் அதனை உங்கள் கண் மருத்துவர் கவனிப்பதற்க்கும், 
விழித்திரை நோயை தடுக்கும் முயற்சிகளுக்கும், ஆபத்தினை ஏற்படுத்தும் விழித்திரை நோய்களை ஒரு நல்ல பயனுள்ள வகையில் கண்டு பிடிப்பதற்க்கும், சரியான சிகிச்சை அளிப்பதற்க்கும் கண் புரை இடையூறாக இருக்கலாம், 

அத்தகைய சூழ்நிலைகளில் விழித்திரை நோய்களுக்கு சரியான பயனுள்ள வகையில் சிகிச்சை அளிப்பதற்க்காக முற்றாத நிலையிலும் கண் புரைக்கு உடனடியாக ஆபரேஷன் செய்து கொள்ளும்படி உங்கள் மருத்துவர் அறிவுருத்தலாம். அதனை பின்பற்றுவது நல்லது.

கேட்டராக்ட் ஆபரேஷன் வகைகள்?
கேட்டராக்ட்டுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
ஆம். தற்போது மூன்று குறிப்பிடத்தக்க முறைகளில் மிக அதிகமான அளவில் கேட்டராக்ட் ஆபரேஷன்கள் செய்யப்படுகிறது. 

அவை:

a - கண் புரை உரித்தல் எனப்படும் Extracapsular Cataract Extraction (ECCE)

b - சிறு துளையிட்டு கண் புரை நீக்குதல் எனப்படும் Small Incision Cartaract Surgery (SICS).

c - ஃபேக்கோஎமல்சிஃபிகேஷன் (Phacoemulsification) முறை எனப்படும் நவீன தொழில் நுட்ப முறை.

இந்த மூன்று முறைகளிலும் ஆபரேஷன் செய்யும் போது கண் உள்ளே ஒரு செயற்கை லென்ஸ் வைத்து ஆபரேஷன் செய்வதன் மூலம் மிகவும் பயன் தரக்கூடிய அளவில் பார்வையை பெறலாம்.

ஆபரேஷனின் போது வலி இருக்குமா?

கேட்டராக்ட் ஆபரேஷன் வலியை ஏற்படுத்தாது. பொதுவாக கேட்டராக்ட் ஆபரேஷனின் போது உங்களுக்கு வலி தெரியாதபடி இருப்பதற்க்காக ஆபரேஷன் செய்யப்படும் கண்ணில் உணர்வில்லாத நிலை (Local Anaesthesia) கொண்டு வரப்பட்டு ஆபரேஷன் செய்யப்படுகிறது. 
இது வலி இல்லாத நிலையை ஏற்படுத்தி ஆபரேஷன் செய்யப்படும் இடத்தில் அசைவுகள் ஏதும் இல்லாத நிலையை உருவாக்கி ஆபரேஷன் செய்யப்படும் முறை. 
கேட்டராக்ட்டுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
ஆனாலும் ஆபரேஷனின் போது நோயாளிகள் சுயஉணர்வோடு தான் இருப்பார்கள். வெகு சிலருக்கு மட்டுமே குறிப்பாக குழந்தைகளுக்கும், ஆபரேஷனின் போது சரியான ஒத்துழைப்பு தர முடியாத நோயாளிகளுக்கும், 

உடல் முழுவதும் உணர்வில்லாத நிலை (General Anaesthesia) கொண்டு வரப்பட்டு ஆபரேஷன் செய்யப்படுகிறது.
* ஃபேக்கோ எமல்சிஃபிகேஷன் முறை எனப்படும் நவீன தொழில் நுட்ப முறையில் ஆபரேஷன் செய்யும் பொழுது நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்யப்படும் 
இடத்தை மரத்துப் போகச் செய்வதற்க்காக மேற்ப்பூச்சு மயக்க மருந்துகள் ( Topical Anaesthesia) பயன்படுத்தி ஆபரேஷன் செய்யப்படுகிறது. இருந்தாலும் மிக அதிகமான அளவில் நோயாளியின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)