கோழி முட்டைகளை நாட்டுக்கோழி முட்டையாக மாற்றி மோசடி செய்த பெண் !

0
தனுஷ் நடித்து வெளியான படம் கொடி. அந்த படத்தின் நாயகி வெள்ளை கோழி முட்டையை டீ தண்ணீரில் முக்கி, முட்டையின் வண்ணத்தை மாற்றி  (Changing the color of the egg) அதை நாட்டுக்கோழி முட்டை என்று அதிக விலைக்கு விற்பனை செய்வார். 
கோழி முட்டைகளை நாட்டுக்கோழி முட்டையாக மாற்றி மோசடி
அதே போன்று கரூர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளை கோழி முட்டையை காபி தூள் தண்ணீரில் முக்கி, நாட்டுக்கோழி முட்டை என்று பெண் ஒருவர் கூவி வியாபாரம் செயதுள்ளார். 

அந்த முட்டையை வாங்கிய சில சமூக ஆர்வலர்கள் (Some social activists who bought that egg), அந்த முட்டையின் ஓட்டை தேய்த்துப் பார்க்கும் போது அந்த கோழி முட்டையில் கலர் மாறிப் போனது. எனவே அவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். 

இதனால் காவல் துறையினர் அந்த பெண்ணை கைது செய்து அவர்கள் நடத்திய விசாரணையில், நாமக்கல் கோழிப் பண்ணைகளிலிருந்து வெள்ளை கோழி முட்டைகளை வாங்கி அதை ப்ரூ காபி தூள் கலந்த தண்ணீரில் நனைத்து எடுத்து, காய வைத்து நாட்டுக்கோழி முட்டை வண்ணத்தில் மாற்றியுள்ளார். 

பின்னர் அதை ஊர் முழுவதும் நாட்டுக்கோழி முட்டை என்று அந்த பெண் விற்றுவந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)