வானியலாளர்கள் கண்டுபிடித்த பால்வெளி - நாசா பாராட்டு !





வானியலாளர்கள் கண்டுபிடித்த பால்வெளி - நாசா பாராட்டு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

நட்சத்திர பால்வெளி மண்டலத்தை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக நட்சத்திரங்கள் அமைந்திருப்பது பற்றியும் கோள்களின் நிலையை பற்றியும்  உலக விஞ்ஞானிகள் ஆய்வு  செய்து வருகின்றனர்.    

வானியலாளர்கள் கண்டுபிடித்த பால்வெளி
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள புனே வானியல் ஆய்வு நிறுவனத்தில் டாக்டர்  கணக் சாகா  தலைமையிலான  விஞ்ஞானிகள் குழு  பூமியிலிருந்து 93 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள  நட்சத்திர பால்வெளியை கண்டறிந்தனர். 

இந்தக் கண்டுபிடிப்பானது இந்திய நிறுவனத்தால்  2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி  விண்ணில் ஏவப்பட்ட ஆஸ்ட்ரோ சாட்  செயற்கைக்கோள் மூலம் சாத்தியமாகியது.   

இந்த கண்டுபிடிப்புகள் நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம்,  ஒளி எப்படி உருவானது  போன்ற கேள்விகளுக்கு விடை காண உதவும் என்று நாசா பாராட்டு தெரிவித்துள்ளது..

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)