கர்நாடகாவில் ட்ரிபிள் லாக்டவுன் அரசு கையில் எடுக்கும் ஆயுதம்.. தனித் தீவு !

கேரள அரசை போல டிரிபிள் லாக் டவுன் நடைமுறையை கையில் எடுப்பதற்கு கர்நாடக அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
கர்நாடகாவில் ட்ரிபிள் லாக்டவுன்

எனவே பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பிற மாநிலங்களி லிருந்து போக்குவரத்து தடை செய்யப் படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பெங்களூரு நகரில் தினமும் நூற்றுக்கும் குறைவான கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆயிரத்தை தாண்டி கொண்டிருக் கிறது.
தினம் தினம் புதிய உச்சம் என்ற அளவுக்கு உயர்வதால் கர்நாடக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அமைச்சர்கள் குழு
அமைச்சர்கள் குழு
7 அமைச்சர்கள் கொண்ட குழுவை பெங்களூரு நகரத்திற்கு பிரத்தியேகமாக நியமித்துள்ளார் முதல்வர் எடியூரப்பா. இதனிடையே, 8 ஐபிஎஸ் அதிகாரிகளையும் சிறப்பு குழுக்களாக களமிறங்கி யுள்ளார். 
முதல்வர் அலுவலகத் திலேயே பலருக்கும் வைரஸ் பாதிப்பு இருந்ததால் தற்போது எடியூரப்பா தனது வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

கேரள பார்முலா
கேரள பார்முலா

கேரள அரசு, காசர்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப் படுத்திய ட்ரிபிள் லாக்டவுன் நடைமுறையை கர்நாடக அரசும் பின்பற்ற திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது இந்த நடைமுறை கேரள தலைநகர் திருவனந்தபுரம் நகரிலும் அமலுக்கு வந்துள்ளது. முதல் படியில், கண்டைன்மெண்ட் பகுதி முழுக்க சீல் வைக்கப்படும். 

உள்ளே வருவதற்கும், வெளியே போவதற்கும் ஒரே ஒரு சாலை மட்டுமே திறந்து வைக்கப்பட்டு, அங்கும் அத்தியாவசிய பணிகளுக்காக செல்லக்கூடிய வாகனங்களுக்கு மட்டும் காவல் துறையினர் அனுமதி கொடுப்பார்கள்.

பிற தொடர்புகளுக்கும் கட்டுப்பாடு
பிற தொடர்புகளுக்கும் கட்டுப்பாடு
அடுத்த நடைமுறை என்னவென்றால், கண்டைன்மெண்ட் பகுதிகள் மற்றும் பெருவாரியாக நோய் தொற்று ஏற்படக்கூடிய கிளஸ்டர் பகுதிகளில் உள்ள முதன்மை தொடர்புகள் 
மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகள் வசிக்கக்கூடிய பகுதிகளிலும் முழுமையான கட்டுப்பாடு கொண்டு வரப்படும். 

இப்போது நோயாளிகள் வசிக்கக்கூடிய பகுதியில் மட்டும் தான் கட்டுப்பாடு இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

90 சதவீதம் கட்டுப்பாடு
90 சதவீதம் கட்டுப்பாடு

மூன்றாவது அம்சம் என்ன வென்றால், வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர், பிறருக்கு அதை பரப்பி விடக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

மேலும் மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்து, மாநிலங்களுக் கிடையேயான போக்குவரத்து ஆகியவை தடை செய்யப்படும். 
காசர்கோடு மாவட்டத்தில் இது போன்ற லாக்டவுன் நடைமுறை காரணமாக 90 சதவீதம் அளவுக்கு நோய் பரவல் கட்டுப் படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

மோசமான ஹாட்ஸ்பாட்
மோசமான ஹாட்ஸ்பாட்
டாக்டர் மஞ்சுநாத் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழு சமீபத்தில் கர்நாடக அரசுக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்த ட்ரிபிள் லாக்டவுன் திட்டம் பற்றி பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது. 

இது பற்றி அவர் கூறுகையில், பெங்களூர் நகர் மிக மோசமான ஹாட்ஸ்பாட் ஆக மாறிக் கொண்டே இருப்பதால் 

இந்த மாதிரியான ஒரு லாக்டவுனை நடைமுறையில் எடுக்க திட்டம் இருக்கிறது. அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கர்நாடகா லாக்டவுன்
கர்நாடகா லாக்டவுன்

கொரோனா கிளினிகல் எக்ஸ்பர்ட் கமிட்டி தலைவர் சச்சிதானந்தா, இதுபற்றி கூறுகையில், இந்த நடைமுறை காரணமாக வைரஸ் பரவலை கட்டுப் படுத்துவதுடன் பொருளாதார நடவடிக்கை களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள முடியும். 
அத்தியாவசிய தேவைகளுக்காக யார் யார் வெளியே செல்கிறார்களோ அவர்கள் கண்காணிக்க படுவார்கள். தடுக்க படுவதில்லை. 

எனவே ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களிலும் பிரச்சினைகளை குறைத்து விட முடியும் என்கிறார் உறுதியுடன்.

தமிழகத்திலிருந்து பெங்களூர் வாகனங்கள்
தமிழகத்திலிருந்து பெங்களூர் வாகனங்கள்

ஏற்கனவே தமிழகத்தில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப் படுகின்றன. 
இதுவரை, அரசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட வில்லை. ஆனால் இனிமேல் அது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: