ஆண்களைத் தாக்கும் இரைப்பை ஏற்றத்தால் சந்திக்கும் அபாயம் தெரியுமா?

ஆண்களுக்கு இரைப்பை ஏற்றம் என்னும் பாதிப்பு ஏற்படுவது மிகவும் பொதுவானது. இரைப்பை ஏற்றம் என்பது ஒரு வகையான குடலிறக்கம்.
ஆண்களைத் தாக்கும் இரைப்பை ஏற்றம்

ஆனால் இதனை புறக்கணிப்பதன் காரணமாக இது தீவிர விளைவுகளை உண்டாக்கும் நோயாக மாறுகிறது. 

பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் இந்த பாதிப்பு, சில நேரங்களில் பெண்களையும் தாக்கக்கூடும். பெண்களுக்கு இந்த பாதிப்பு பிரசவத்திற்கு பின் ஏற்படலாம்.
இரைப்பை அறுவை சிகிச்சைகள் பொதுவாக தோல்வியில் முடிவதாகவும் இதனால் வாழ்நாள் முழுவதும் இந்த இழப்பைச் சுமந்து வாழ வேண்டி இருப்பதாகவும் ஒரு தவறான கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. 

ஆனால் இது உண்மை இல்லை. இரைப்பை அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகவே நடத்தப்படுகிறது. 

சான்றுகளை பார்க்கும் போது, இரைப்பை அறுவை சிகிச்சைக்கு பின் இரைப்பைக்கு எந்த ஒரு பாதிப்பும் உண்டாவதில்லை. 

ஆகவே இரைப்பை பாதிப்புகள் ஏற்படும் போது, அறுவை சிகிச்சை குறித்த பயம் காரணமாக பாதிப்புகளை புறக்கணிக்க வேண்டாம். சரியான நேரத்தில் இரைப்பை பாதிப்பை சரிசெய்யாமல் போனால், தீவிர பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். 

அதனால் இதன் விளைவுகளைத் தவிர்க்க, இரைப்பை பாதிப்புகள் குறித்த அறிகுறிகளை அசட்டை செய்ய வேண்டாம்.

இரைப்பை ஏற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள்
இரைப்பை ஏற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள்

வயிற்றுப் பகுதியின் மேல் பகுதி உதரவிதானத்திற்கு வெளியே வரும் நிலையை இரைப்பை ஏற்றம் என்று குறிப்பிடுவோம். 

இதனால் உதரவிதானம் பலவீனமடைந்து உட்புறம் சுரக்கும் அமிலங்களை நிறுத்த முடியாத நிலை உண்டாகிறது. இந்த அமிலங்கள் வயிற்றை அடைந்து எரிச்சல் உண்டாகிறது. 

நமக்கு வயிற்றில் ஒரு வித எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது மற்றும் நெஞ்சு பகுதியில் ஒருவித வலி உண்டாகிறது. 
இரைப்பை ஏற்றம் சிறியதாக இருக்கும் போது கவனிக்க இயலாமல் போகலாம். ஆனால் பிரச்சனை தீவிரமாகும் போது மார்பு பகுதியில் ஒரு வீக்கம் உண்டாகலாம்.

இரைப்பை ஏற்றத்தின் அறிகுறிகள்
இரைப்பை ஏற்றத்தின் அறிகுறிகள்

* வயிற்று கொழுப்பு வெளியில் தெரிவது

* குறிப்பிட்ட கால் மூட்டில் வீக்கத்தை உணர்வது

* வீக்கமடைந்து மூட்டு பகுதியில் வலி தெரிவது

* நீண்ட நேரம் நிற்பதில் சிரமம் ஏற்படுவது

* குடல் இயக்கங்களில் தொந்தரவு இருப்பது

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் நீங்கள் இரைப்பை ஏற்றத்தை கண்டு கொள்ளாமல் விடுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

இதன் விளைவுகள் இன்னும் தீவிரமாக இருக்கலாம். நாளுக்கு நாள் இரைப்பை ஏற்றத்தின் அபாயம் அதிகரித்தபடி இருக்கும். 
எனவே சரியான நேரத்தில் இரைப்பை ஏற்றத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. ஏற்கனவே கூறியபடி, இரைப்பை ஏற்றத்திற்கு தகுந்த சிகிச்சை அறுவை சிகிச்சை மட்டுமே.

இரைப்பை ஏற்றத்திற்கான சிகிச்சை
இரைப்பை ஏற்றத்திற்கான சிகிச்சை

சிறிய இரைப்பை ஏற்றத்தைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு சிறு கீறல் ஏற்படுத்தப் படுகிறது. அந்த வழியாக சேதமடைந்த பகுதி சரி செய்யப் படுகிறது. 

அடுத்த 10-15 நாட்களுக்குள் நோயாளியின் காயம் ஆறிவிடுகிறது. ஆனால் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்கள் நோயாளி எந்த ஒரு கனமான வேலைகளையும் செய்யக் கூடாது. 
பொதுவாக அறுவை சிகிச்சைக்கு பின் உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். அதனால் உடல் தேறி வருவதற்கு இரண்டு முதல் மூன்று மாத காலம் தேவைப்படும்.

தடுப்பு முறைகள்
தடுப்பு முறைகள்

* மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை அலட்சியம் செய்ய வேண்டாம். நீண்ட நாட்கள் மலச்சிக்கல் பாதிப்பு இருந்தால் மருத்துவரை அணுகவும்.

* மேல் வயிற்றில் தீவிர வலி இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்.
* அடிக்கடி வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்தி வலியை அடக்க வேண்டாம்.

* தொடர்ந்து நெஞ்செரிச்சல் இருந்து வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
Tags:
Privacy and cookie settings