கால்களால் சுவையை உணரும் பட்டாம் பூச்சி சுவாரஸ்யங்கள் !

பட்டாம்பூச்சியை யாருக்கு தான் பிடிக்காது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பூச்சியை ரசிப்பது உண்டு. ஏனென்றால் இது பல நிறங்களில் வருகிறது.
சுவையை உணரும் பட்டாம் பூச்சி

இப்படி பலநிறங்களில் வரக்கூடிய இந்த பட்டாம் பூச்சிகள் சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி திரிகின்றன. உலகம் முழுவதும் 17,500 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த பட்டாம்பூச்சிகள் கால்களில் சுவை உணரிகளை கொண்டுள்ளன. இந்த சுவை உணரிகள் கால்களில் இருப்பதினால் அவை கால்களால் தான் சுவையை அறிகின்றன.
அந்த சுவை உணரிகள் மனிதன் சுவையை அறிய எவ்வாறு நாக்கு உதவுகிறதோ அது போலவே இருக்கின்றன. ஆனால் அது மனிதர்களுடைய நாக்கை விட 200 மடங்கு சக்தி கொண்டவை .

பட்டாம்பூச்சிகள், இந்த சுவை உணரிகளை கொண்டு முட்டை யிடுவதற்கு முன்பு அவை முட்டையிடும் இடத்தில் ஏதாவது நச்சுகள் அல்லது 

அவற்றின் சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்கும் ஏதவாது பொருள்கள் இருக்கிறதா என்பதை சோதிக்க பயன்படுத்துகின்றன.

முழுமையாக வளர்ந்த பட்டாம்பூச்சிகள் சாப்பிடுவதில்லையாம் தெரியுமா உங்களுக்கு? அவை தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்கின்றன. 

ஆனால் அவற்றின் கம்பளிப்பூச்சிகள் அதாவது கேட்டர் பில்லர்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிடுகின்றன.
பட்டாம் பூச்சி சுவாரஸ்யங்கள்

முட்டைகள் குஞ்சு பொரித்தவுடன், இலைகளை பிறந்த குஞ்சுகளுக்கு உணவளிக்கத் தொடங்குகின்றன. 

சில தாவரங்கள் நச்சுகளை உருவாக்குவதால், தவறான இலைகளைத் தேர்ந்தெடுப்பது பேரழிவை ஏற்படுத்தி விடும் என்று தாய் பட்டாம்பூச்சி அதனை சோதனை செய்து குஞ்சுகளுக்கு கொடுக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரு பெண் பட்டாம்பூச்சி அதன் குழந்தைகள் ஒரு இலையை சாப்பிட ஆரம்பிக்கும் முன் அது தனது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா என்பதை அறிய அந்த இலையை சுவைத்து சோதனை செய்கிறது.
சோதனை செய்த பிறகு அதனுடைய கால்களுக்கு எந்த சேதமும் ஏற்படா விட்டால் அந்த இலைகள் மூலம் தனது கம்பளிப் பூச்சிகளைப் பாதுகாப்பாக வளர்க்க முடியும் என்று அவைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கிறது.
Tags: