கொரோனா பாதிப்பால் ஆகஸ்டில் பள்ளிகள் திறக்க பெற்றோர் எதிர்ப்பு !

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிக உச்சமாக இருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆகஸ்டில் பள்ளிகள் திறக்க பெற்றோர்

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் இருந்து வருகிறது. 

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு என்பது 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை இருக்கிறது. கொரோனா மரணங்களும் நாள்தோறும் 200க்கும் அதிகமாக இருந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பா?
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆகஸ்ட் 15-ந் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறியிருந்தார். 

அனேகமாக செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்த பள்ளிகள் திறக்கும் என கூடும் என தகவல்கள் வெளியாகின.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்., நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது; 

ஒவ்வொரு நாளும் 8 ஆயிரம் பேர் முதல் 9 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப் படுகின்றனர். இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப் பட்டிருக்கிறது.

பள்ளிகளை திறக்காதீங்க

இந்த சூழ்நிலையில் பள்ளிகளை உடனே திறக்கக் கூடாது என்கின்றனர் பெற்றோர். இந்தியாவில் மொத்தம் 33 கோடி மாணவர்கள் இருக்கின்றனர். 
இந்தியாவைப் பொறுத்தவ ரையில் கொரோனா ஜீரோ பாதிப்பு என்று அறிவிக்கும் வரை பள்ளிகளையே திறக்கக் கூடாது என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. 

இதையும் மீறி பள்ளிகளைத் திறந்தால் பிள்ளைகளை அனுப்பவும் மாட்டோம் என்கின்றனர் பெற்றோர்கள்.

ஆன்லைனிலேயே வகுப்பு நடத்துங்க
பள்ளிகளை திறக்காதீங்க

அத்துடன் ஆன்லைன் மூல மாணவர்களுக்கு தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இதனையே தொடர்ந்து பின்பற்றலாமே? எதற்காக வீணாக அரசு ரிஸ்க் எடுக்கிறது என்பதும் பெற்றோர்களின் கேள்வி. பள்ளிகூடங்களைத் திறந்தால் 
மாணவர்களால் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவே முடியாது என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings