நம்பிக்கைக்குரிய ஐஏஎஸ்.. யார் இந்த பீலா ராஜேஷ்?

தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார். 
நம்பிக்கைக்குரிய ஐஏஎஸ்


தமிழகத்தில் மக்கள் இடையே லைம் லைட்டில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷ் குறித்து முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுக்க மாநில அரசுகள் கொரோனாவிற்கு எதிராக மிக தீவிரமாக போராடி வருகிறது. 

முக்கியமாக மேற்கு வங்கம், ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

கேரளாவில் 17 பேர் கொண்ட பெண்கள் டீம் ஒன்றுதான் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா தலைமையில் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகிறது. 
தற்போது தமிழகத்திலும் அப்படி ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிதான் கொரோனாவிற்கு எதிராக களமிறங்கி முக்கியமான, ஆக்க பூர்வமான பணிகளை செய்து வருகிறார். அவர்தான் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷ்!

ஜெயலலிதா சர்ச்சை

தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து பல சந்தேகங்கள் நிலவிய நேரம் அது. கடந்த வருட தொடக்கத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. 

முன்னாள் நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் மிக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது. அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி ஜெ. ராதாகிருஷ்னன். இவரிடமும் விசாரணை நடந்தது.

ஜெ. ராதாகிருஷ்னன் நீக்கம்

ஜெ. ராதாகிருஷ்னன் தொடக்கத்தில் மிகவும் நிதானமாக, ஜெயலலிதா மரணம் குறித்து பேசி வந்தார். ஆனால் போக போக ஜெ. ராதாகிருஷ்னன் கொடுத்த பேட்டிகள் சில அதிமுக தரப்பிற்கு சிக்கலை கொடுத்தது. 
ஜெயலலிதா சர்ச்சை
மிக முக்கியமாக அவர் ஆறுமுகசாமி ஆணையத்தில் கொடுத்த சில வாக்கு மூலம் அரசுக்கு சிக்கலை கொடுத்தது. 

இதனால் உடனே கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஜெ. ராதாகிருஷ்னன் சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட்டு, போக்குவரத்து துறை செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டார்..

முக்கியமான வாய்ப்பு


வாய்ப்புகள் சில முறை தான் வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு தான் பீலா ராஜேஷ் அலுவலக கதவை அன்று தட்டியது. 

அப்போது ஐஎஸ்எஸ் அதிகாரி பீலா ராஜேஷ் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறையின் தமிழக கமிஷ்னராக இருந்தார். 

மருத்துவரான இவரை உடனே தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளராக நியமித்தது. கடந்த வருடம் பிப்ரவரி 17ம் தேதி சுகாதாரத்துறை செயலாளரான இவர், அதன்பின் மிக சிறப்பாக செயல்பட தொடங்கினார் .

நிறைய அரசியல் அழுத்தம்

இவர் சுகாதாரத்துறை செயலாளராக பதவி ஏற்ற நேரத்தில் இருந்தே இவருக்கு நிறைய அரசியல் அழுத்தம் இருந்தது. 
நிறைய அரசியல் அழுத்தம்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான விசாரணை இடையில் கொஞ்சம் சூடு பிடித்தது. இவர் இருந்த நேரத்தில் தான் விஜயபாஸ்கர் பதவி விலகல் வரை சென்றார். 

முதல்வரை பல முறை விஜயபாஸ்கர் சந்தித்து பேசிய நிகழ்வுகள் எல்லாம் நடந்தது. அப்போது தனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களை எல்லாம் பீலா ராஜேஷ் திறமையாக எதிர்கொண்டார்.

பாலம் போல செயல்படுகிறார்

மத்திய அரசு மாநில அரசு இரண்டு பக்கங்களில் இருந்தும் பீலா ராஜேஷுக்கு நிறைய அழுத்தங்கள் வந்தது. 
இப்போதும் கூட கொரோனா சமயத்தில் விஜயபாஸ்கர் கொடுத்த சில பேட்டிகள் முதல்வர் பழனிசாமி தரப்பிற்கு கோபம் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் விஜயபாஸ்கரை பேட்டி கொடுக்க கூடாது என்று முதல்வர் கட்டளை இட்டதாகவும் கூறுகிறார்கள். 

இப்படிப்பட்ட அரசியல் சிக்கல் எதுவும் தன்னுடைய கொரோனா பணிகளை பாதிக்காத வகையில் பீலா ராஜேஷ் செயல்பட்டு வருகிறார்.

கொரோனா பணி

தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான பணிகளை முன்னின்று நடத்துவது பீலா ராஜேஷ் தான். 
கொரோனா பணி
விஜயபாஸ்கருக்கு ஆலோசனை வழங்குவது, ஐடியாக்களை கொடுப்பது, திட்டங்களை வகுத்து கொடுப்பது, சரியான புள்ளி விவரங்களை கொடுப்பது பீலா ராஜேஷ் தான் என்கிறார்கள். 

இவருக்கு விஜயபாஸ்கரின் குட் புக்கிலும் இருக்கிறார். முதல்வர் பழனிசாமியின் குட்புக்கிலும் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு இணைப்பு பாலம் போல பீலா ராஜேஷ் செயல்படுகிறார்.

வரலாறு


இவர் 1997ம் ஆண்டு தமிழக ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். சென்னை மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில்தான் இவர் மருத்துவம் படித்தார். மருத்துவம் படித்து விட்டு அதன்பின் இவர் ஐஏஎஸ் அதிகாரி ஆனார். 

அப்போதில் இருந்து இவர் மருத்துவம் தொடர்பான தமிழக துறைகளில் பணியாற்றி உள்ளார். தமிழக அரசியல்வாதிகள் பலரிடம் இவர் குட் மார்க் வாங்கியவர் என்கிறார்கள். 

கேரளாவில் நிப்பா வந்த நேரத்தில், இவர் தமிழக அரசுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளாராம்.

நம்பிக்கை

இவர் மீது தமிழக அரசு பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. கோட்டையில் இருக்கும் அதிகாரிகள் பலர் இவரை முக்கியமான நபராக கருதுகிறார்கள். 

ஏற்கனவே இவர் தமிழக தலைமை செயலகத்தில் பணியாற்றி இருக்கிறார். அப்போதே ஆட்சி அதிகாரத்தில் முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். 
நம்பிக்கை
அதனால் எப்படியும் இந்த கொரோனா எதிர்ப்பு போரை சிறப்பாக இவர் கையாள்வார், பெரிய அளவில் இவர் சொதப்ப வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

அனைத்து கட்சிக்கும் கொஞ்சம் நெருக்கம்

மிக முக்கியமாக இதற்கு முன் இருந்த சில ஐஏஎஸ் அதிகாரிகள் போல சர்ச்சையில் இவர் சிக்கியது இல்லை. பெரிதாக அரசியல் செய்தது இல்லை. அரசியல் சார்பு இன்றிதான் இவர் செயல்பட்டு இருக்கிறார். 

இதனால் திமுக, அதிமுக என்று யாருக்கும் இவர் பகையாளி கிடையாது. இரண்டு தரப்பும் ஆட்சி செய்த போதும் அவர்களுக்கு நெருக்கமாக இருந்து பணிகளை செய்துள்ளார். 
கொரோனா எதிர்ப்பு பணியில் அவரின் இந்த ''வரலாறுதான் '' பெரிய அளவில் உதவி வருகிறது.

பல துறைகளில் பணியாற்றிய அனுபவம்

இதெல்லாம் போக தமிழகத்தில் பல்வேறு துறைகளில் இவர் பணியாற்றி உள்ளார்.

முதல்வரின் தனிப்பட்ட சிஎம் செல்லில் பணியாற்றி உள்ளார்.

செங்கல்பட்டு துணை ஆட்சியாராக இருந்துள்ளார்.

மீன்வளத்துறையின் திட்ட இயக்குனராக இருந்துள்ளார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக இருந்துள்ளார்.

செமையாக சமாளிக்கிறார்

தற்போது கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளது. அதிலும் நேற்று 57 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 
செமையாக சமாளிக்கிறார்


ஆனால் இந்த அதிர்ச்சியை முகத்தில் காட்டி கொள்ளாமல் மிகவும் பொறுமையாக பீலா ராஜேஷ் பேட்டிகளை அளித்து வருகிறார். 

முக்கியமாக டெல்லி மத கூட்டம் குறித்த கேள்விக்கு '' எல்லா மத கூட்டங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்'' என்று அதிரடி பதில் அளித்து, தேவை இல்லாத சர்ச்சைகள் எழுவதை தடுத்து நிறுத்தினார். 
நிறைய அரசியல் அழுத்தங்களுக்கு இடையே பெண்கள் பலர் நாடு முழுக்க இப்படி கொரோனாவை எதிர் கொண்டு தான் வருகிறார்கள்!
Tags: