விழித்திரு, பசித்திரு - ஏழைகளுக்கு உதவிடு.. ரமலான் நோன்பு !





விழித்திரு, பசித்திரு - ஏழைகளுக்கு உதவிடு.. ரமலான் நோன்பு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஜகாத். தான் சேமித்து வைத்துள்ள செல்வத்தில் இருந்து அடிப்படை தேவைகள் போக எஞ்சியதில் 
ரமலான் நோன்பு

இரண்டரை சதவிகிதம் ஏழைகளுக்கும் தேவையுள்ளவர் களுக்கும் கட்டாய தானமாக மனமுவந்து கொடுக்க வேண்டும் என்பது தான் ஜகாத்.

ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா இஸ்லாமியர் களுக்குமே, அல்லா அதிகம் நெருங்கும் மாதமாக கொண்டாடப் படுகிறது. 
இதனால் தான் இந்த மாதத்தில் ஒரு சிலர் தவிர அனைவருமே நோன்பு இருக்க என்றுமே தவறுவ தில்லை. 

அதிகாலை முதல், மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், பிற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவதை உணர்த்துகிறது ரமலான் நோன்பு.

ரமலான் நோன்பு வாழ்வியல் தத்துவங்களை உணர்த்துகிறது இஸ்லாம் மார்க்கம். பசித்தவனுக்கு உணவளிக்கச் சொல்லுகின்ற இஸ்லாம் அந்தப் பசியின் அவதிகளை, 

பசி ஏற்படுத்துகின்ற மயக்கத்தை, தொண்டை வறளும் தாகத்தை, தாகத்தின் தவிப்பை அதன் களைப்பை மனிதனுக்குள் விதைக்கிறது. 

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாதத்தில் பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகள். 

கொரோனா வைரஸ் பரவி வரும் இன்றைய கால கட்டத்தில் வீட்டிலேயே தொழுகை செய்யுங்கள் என்ற கொள்கையும் சேர்க்கப் பட்டுள்ளது.

ரமலான் மாத தர்மம்
ரமலான் மாத தர்மம்

ரமலான் மாதத்தில் செய்யும் தான தர்மத்திற்கு எழுநூறு மடங்கு நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது கருணையின் மாதமாக குறிப்பிடப்படுகிறது. 

இப்னு அப்பாஸ் என்ற நபித்தோழர் கூறுகின்றார், ‘ரமலான் மாதம் வந்து விட்டால், நபி(ஸல்)அவர்கள் தான தர்மங்களை வாரி வழங்குவார்கள். 
எந்தளவுக் கென்றால் தடை யில்லாமல் வேகமாக வீசும் காற்றுக்கு ஒப்பானதாக அவை இருக்கும்'.

5 கடமைகள்

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஜகாத். தான் சேமித்து வைத்துள்ள செல்வத்தில் இருந்து அடிப்படை தேவைகள் போக எஞ்சியதில் 

இரண்டரை சதவிகிதம் ஏழைகளுக்கும் தேவையுள்ளவர் களுக்கும் கட்டாய தானமாக மனமுவந்து கொடுக்க வேண்டும் என்பது தான் ஜகாத். வசதியுள்ள ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் ஜகாத் கட்டாய கடமையாகும். 

ஜகாத் கொடுக்கும் தகுதி யிருந்தும் கொடுக்காதவர் பாவம் செய்தவர், கடுமையான தண்டனைக்கு உரியவர் ஆவார்.

ஜகாத் கட்டாயம்
ஜகாத் கட்டாயம்

இறைவன் தனக்கு காணிக்கை செலுத்த கூறவில்லை மாறாக ஏழைகளுக்கு கொடுக்க சொல்கிறார். ஜகாத் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வசனம் கூறியுள்ளது. 

ஏழை ஒருவனுக்கு உணவளிப்பதன் மூலமே இறை திருப்தி கிடைக்கும். ‘இந்த தானதர்மங்க ளெல்லாம் ஏழைகள், வறியவர்கள், 
இந்த தானதர்மங் களை வசூலிக்கவும், பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்க மாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், 

அடிமைகளை விடுவிப்பதற்கும், கடனாளி களுக்கும், இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும்.' -திருக்குர்ஆன் 9:60.

கருணையுள்ள மாதம்

இறைக்க இறைக்க ஊரும் கிணறு போல கொடுக்க கொடுக்க செல்வம் வளரும். அப்படி சேர்த்து வைத்த செல்வமும் தூய்மையான தாக மாறும். 
கருணையுள்ள மாதம்

ரம்ஜான் நோன்பு காலத்தில் பசியோடு இருப்பது என்பது பற்றிய பயிற்சியும் ஏழைகளுக்கு தானம் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையும் பிறப்பிக்கப் படுகிறது. 

இதன் மூலம் நற்கூலி என்ற வெகுமதி கிடைக்கும் என்கிறார் இறைவன் இதனால் தான் ரமலான் மாதம் கருணை மாதமாக, தூய்மையான மாதமாக கடைபிக்கப் படுகிறது. 
கொரோனா வைரஸ் தாக்கம் நிறைந்த இந்த மாதத்தில் பசியோடு தனித்திருக்கும் நேரத்தில் வீட்டிலேயே பாதுகாப்புடன் தொழுகை செய்வதோடு பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு உணவு கொடுப்போம்.
Tags: