ஊசி, நூல் இல்லாம முகக்கவசம் தயாரிப்பது எப்படி?





ஊசி, நூல் இல்லாம முகக்கவசம் தயாரிப்பது எப்படி?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதிப்பி லிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 
முகக்கவசம் தயாரிப்பது எப்படி?


கை சுத்தம் செய்யும் சானிடைசர்கள் மற்றும் மருத்துவ முகக் கவசங்கள் ஆகிய வற்றின் தேவையும், விற்பனையும் பன்மடங்காகி யுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2,082,372 ஆக அதிகரித்துள்ளது, 

உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,34, 560 ஐயும் தாண்டி யுள்ளதால், உலகளவில் மருத்துவ நிபுணர்களால் முதலில் கொடுக்கப் பட்டிருந்த பாதுகாப்பு வழிமுறை களில் மாற்றம் ஏற்பட்டுத்தப் பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொது மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள், 
அவ்வாறு வெளியில் செல்லும் போது, துணி முகக் கவசம் அணிய வேண்டும் என நோய்க் கட்டுப்பாட்டு மையமும் (சிடிசி), இந்திய அரசும் பொது மக்களுக்கு பரிந்துரைக்கின்றன. 

நாவல் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர் களிடமிருந்து, மற்றவர் களுக்கு இந்த நோய்க் கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.

முக கவசங்கள்

மருத்துவ முகக் கவசங்கள், சுவாசக் கருவிகள் என்பவை வேறு, துணி முகக் கவசங்கள் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயம், N-95 சுவாசக் கருவிகள் அல்லது அறுவைச் சிகிச்சை முகக் கவசங்கள் ஆகியவை, அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் என்பதாலும், 
முக கவசங்கள்


உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் அவற்றுக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவுவதாலும், இவை முழுமையாக மருத்துவப் பணிகளுக்காக மட்டுமே ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். 

எனவே அவற்றைக் கொள்முதல் செய்யகூடாது என நோய்க் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) வன்மையாக அறிவுறுத்துகிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
இரண்டாவதாக, முகமூடிகள் மற்றும் துணி முகக் கவசங்கள் ஆகியவை, சமூக தனிமைப் படுத்தல் மற்றும் சிறந்த கை, சுவாச சுகாதார நடைமுறைகள் ஆகிய வற்றுக்கான ஒரு மாற்று ஏற்பாடு அல்ல. 

அவை பாதுகாப்பிற்கான ஒரு வழிமுறையே தவிர, இவற்றை ஒரு மாற்றுப் பொருளாகக் கருதக் கூடாது.


முதலில், உங்கள் கைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். முகக் கவசம் செய்யும் இடத்தையும் சுத்தப்படுத்தி கிருமி நீக்கம் செய்து கொள்ளுங்கள். 

வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே, சுலபமான முறையில் பாதுகாப்பான முகக் கவசம் தயாரிக்க முடியும். 

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் மையம் பகிர்வு செய்துள்ள அறிவுத்தல்களின் படி, பின்வரும் இரண்டு முறைகளில், நீங்கள் தையல் இல்லாத துணி முகக் கவசம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

* கத்தரிகோல்

* டி-ஷர்ட்

தயாரிக்கும் முறை:

* பழைய காட்டன் டி-ஷர்ட் ஒன்றை நன்றாக துவைத்து சுத்தம் செய்து கொள்ளவும்.

* டி-ஷர்ட்டின் கீழ்ப் பகுதியி லிருந்து 7-8 அங்குலங்கள் வெட்டிக் கொள்ளவும்.

* டி-ஷர்ட்டின் இரண்டு ஓரங்களையும் சேர்த்து வெட்டிக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். எனவே உங்களுக்கு இரண்டு மடிப்புகள் கிடைக்கும்.
வீட்டிலேயே துணி முகக் கவசம் தயாரிப்பது எப்படி?


* நீங்கள் வெட்டியுள்ள 8 அங்குலத் துணி யிலிருந்து, மீண்டும் 6 அங்குல செவ்வக வடிவில் துணியை வெட்டிக் கொள்ளவும்.

* கட்டிக் கொள்ளுவதற்கு ஏற்றவாறு, நாடாக்களை உருவாக்க, துணியின் இரண்டு ஓரங்களையும் வெட்டிக் கொள்ளவும்.
* ஒரு நாடாவை கழுத்தைச் சுற்றிக் கட்டிக் கொள்ளுங்கள், மற்ற நாடாவை தலையின் மேல் பகுதியைச் சுற்றிக் கட்டிக் கொள்ளுங்கள்.

நீளமான கைக்குட்டை (பந்தனா) முகமூடி

தேவையான பொருட்கள்:

* ஒரு சதுர வடிவிலான காட்டன் துணி அல்லது நீளமான கைக்குட்டை

* ஹேர் பேண்ட்/ ரப்பர் பேண்ட்

* கத்தரிக்கோல்

* சேப்டி பின்

* காபி ஃபில்டர் அல்லது பேப்பர் டவல்

தயாரிக்கும் முறை:
* காபி ஃபில்டரை கிடை மட்டமாக (horizontally) வெட்டி, இரண்டு பாதியாக பிரித்துக் கொள்ளவும்.

* பந்தனா கைக்குட்டையை அல்லது சதுர வடிவிலான காட்டன் துணியை கிடை மட்டமாக (horizontally) மடித்துக் கொள்ளவும்.

* இப்போது நீங்கள் மடித்துள்ள காட்டன் துணியின் நடுப்பகுதியில், காபி ஃபில்டரின் மேல் பாதியை வைக்கவும்.

* காபி ஃபில்டரை வைத்த பின்னர், காபி ஃபில்டர் முற்றிலும் மூடப்பட்டு, மடிப்பின் நடுவில் இருக்கும் வகையில், காட்டன் துணியின் மேல் பகுதியை கீழ் பக்கமாகவும்,
நீளமான கைக்குட்டை (பந்தனா) முகமூடி


கீழ் பகுதியை மேல் பக்கமாகவும் மடித்துக் கொள்ளவும்.

* காட்டன் துணியின் ஒவ்வொரு மூலையிலும், மூன்றில் ஒரு பகுதி அளவில் ரப்பர் பேண்ட் அல்லது ஹேர் பேண்டைப் போடவும்.

* காட்டன் துணியின் நடுப்பகுதியை நோக்கி, ஹேர் பேண்ட் மூலம் ஒவ்வொரு மூலையையும் மடித்து முறையாக டக் செய்து கொள்ளவும்.

* முகமூடியைப் பாதுகாப்பாக வைப்பதற்கு நீங்கள் சேப்டி பின் பயன்படுத்தலாம்.

நினைவில் கொள்ள வேண்டியது:

* இந்த துணி முகமூடிகளை தினமும் துவைத்து காற்றில் காய வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
* மேலும், உங்கள் முகத்திலிருந்து முகக் கவசத்தை கழற்றும் போது, முகக் கவசத்தின் உள்பகுதியை தொடக்கூடாது.

* முகமூடியை முகத்திலிருந்து கழற்றி யவுடன், உங்கள் கைகளை உடனடியாகக் கழுவவும்.

* ஒவ்வொரு தடவையும் நீங்கள் இந்த முகமுடியை அணியும் போது, உள்ளே உள்ள பேப்பர் டவல்/ காபி ஃபில்டரை மாற்றிக் கொள்ள மறக்க வேண்டாம்.
Tags: