அடிக்கடி பாராசிட்டமால் சாப்பிடுவீற்களா? படிங்க !

காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரை தான் பாராசிட்டமால் (Paracetamol is a pill given for all ailments like fever, headache, leg pain and body aches.). 
பாராசிட்டமால் - paracetamol
அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதும் பாக்கெட் பாக்கெட்டாக கொடுப்பது பாராசிட்டமலை தான். இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடனடி உயிரிழப்பு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

மனிதர்களின் உயிரிழப்பு குறித்து எடின்பர்க் நகர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தொடர்ந்து அளவுக் கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டு வரும் ஆட்களுக்கு படிப்படியாக உடலில் சேர்ந்தாலும் கூட 
மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் (Experts say that overdose can lead to death.). சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி திடீர் உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய ஆண்டுகளில் 150 -க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்தி ருப்பதை எடின்பர்க் நகர மருத்துவ மனைகள் பதிவு செய்துள்ளன என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கின்றனர். 
அடிக்கடி பாராசிட்டமால் சாப்பிடுவீற்களா?
நோயாளிகள் உட்கொள்ளும் பாராசிட்டமல் அளவில் ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது என்பதை விட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்து வந்துள்ளது.
ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்து விடுகின்றனர் 

அதனால் திடீரென இறந்தும் போய் விடுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர் (Researchers also say that people die suddenly.).
Tags:
Privacy and cookie settings