பஸ்கள் நீண்ட நாட்கள் இயங்காமலிருந்தால் இன்ஜின்கள் பாதிக்கும் - எச்சரிக்கை !

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரே இடத்தில் அரசு பஸ்கள் எந்த இயக்கமும் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. 
பஸ்கள் இயங்காமலிருந்தால் இன்ஜின்கள் பாதிக்கும்

இதனால் பஸ்சின் இன்ஜின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, பெருத்த நஷ்டம் ஏற்படும். அதை ரிப்பேர் செய்ய பல லட்சம் செலவிட வேண்டி இருக்கும் மெக்கானிக்குகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். 
வாரத்தில் எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது?
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழத்தில் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் ரயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்தும் நிறுத்தப் பட்டுள்ளது. 

இதை யடுத்து தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட ஏசி, எக்ஸ்பிரஸ், சென்னையில் எம்டிசி பஸ்களும், மாவட்டங்களில் டவுன் பஸ்களும் பணி மனைகளில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

ஒருசில பஸ்கள் மட்டும் தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர் களை தினசரி பணிக்கு அழைத்து வருவதற்கு பயன்படுத்தப் படுகின்றன. 

சரியாக பராமரிக்கா விட்டால் இன்ஜின் பழுது பார்ப்புக்கே பல லட்சங்களை செலவிட வேண்டியிருக்கும். 

மார்ச் 24ம் தேதி முதல் இவ்வாறு நிறுத்த ப்பட்டுள்ளதால் பஸ் இன்ஜினில் பாதிப்பு ஏற்படுவதற் கான வாய்ப்புள்ளது என மெக்கானிக்குகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து, தமிழ்நாடு மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் குமரவேல் கூறியதாவது: பஸ் மட்டும் அல்ல, 

எந்த வாகனத்தையும் நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்திருக்கும் பட்சத்தில் இன்ஜினில் லூப்ரிகேசன் குறைந்து, பழுது ஏற்படுவதற் கான வாய்ப்புள்ளது. 
வெள்ளரிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள் !
மேலும் இன்ஜினில் துரு பிடிக்கும். படிப்படியாக பிரேக் சிஸ்டத்திலும் சிக்கல் ஏற்பட்டு, அவை முழுவதும் செயலிழந்து போவதற்கும் வாய்ப்புள்ளது. 

இதனால் பஸ்களை இயக்கும் போது சரியாக பிரேக் பிடிக்காத நிலை ஏற்படும். மேலும் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் பஸ்களில் எலி புகுந்து சேதப்படுத்து வதற்கான வாய்ப்புள்ளது. 

அதை முறையாக கண்காணிக்கா விட்டால், வயர்களில் சேதம் ஏற்பட்டு நாளடைவில் தீ விபத்து கூட ஏற்பட்டு விடும். இதே போல் பாம்பு தங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. 

இது போன்ற காரணங்களால் கிருமி நாசினி கொண்டு மட்டும் சுத்தம் செய்யாமல், முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும்.

எனவே ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு பஸ்களை இயக்கும் போது, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். 
பஸ்களை இயக்கும் போது

அதாவது பிரேக், இன்ஜின் கம்ப்ரஸர், ரேடியேட்டர், பேட்டரி, பிரேக், செல்ப் ஸ்டார்ட், எலக்ட்ரிக் டைனமோ ஆகிய வற்றை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே இயக்க வேண்டும். 
பிகினி ஃபோட்டோக்களை இணையத்தில் தெறிக்கவிட்ட காஜல் !
இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து பஸ்களும் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தினந்தோறும் மெக்கானிக்குகள், ெபாறியாளர்கள் பணிக்கு வந்து உரிய முறையில் பஸ்களை பாதுகாக்கிறார்கள். 

இதற்காக அவர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப் பட்டுள்ளது. இதனால் இன்ஜின் உள்ளிட்ட எதிலும் பிரச்னை வருவதற்கான வாய்ப்பில்லை’ என்றனர்.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !