இந்தோனேஷியாவில் டயர் ஒன்று கழுத்தில் சிக்கிய நிலையில் பல வருடங்களாக தவித்து வரும் முதலையொன்று உள்ளது. 
டயரில் சிக்கிய முதலையை விடுவிப்பதற்கு பரிசு
4 மீற்றர் (13 அடி) நீளமான இந்த முதலையின் கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயர் ஒன்று சிக்கியுள்ளது. சுலாவெசி பிராந்தியத்தி லுள்ள பாலு நகரில் இம்முதலை காணப்படுகிறது. 

இம்முதலையை டயரிலி லிருந்து விடுவிப்பவர் களுக்கு பணப் பரிசு வழங்கப்படும் எனவும் இந்தோனேஷிய அதிகாரிகள் அண்மையில் அறிவித்தனர்.
ஆனால், இதற்கு எவரும் முன்வராததால் இப்பரிசுத் திட்டம் கை விடப்பட்டுள்ளதாக உள்ளூர் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.

முதலையை விடுவிப்பதற் காக விசேட குழு ஒன்று நியமிக்கப்படும் என மேற்படி அதிகார சபையின் தலைவர் ஹஸ்முனி ஹஸ்மார் தெரிவித்துள்ளார்.