டெல்லியை அதிர வைத்த தோட்டா தலையை துளைத்துக் கொண்டு போனது !

பிரீத்தியின் தலையை துளைத்து கொண்டு போனது துப்பாக்கி குண்டு.. நள்ளிரவில் பெண் இன்ஸ்பெக்டர் பிரீத்தியை சக காவலரே சுட்டுக் கொன்றும், தற்கொலை செய்து கொண்டதும் ஒட்டுமொத்த தலை நகரையே திணற வைத்துள்ளது!
பிரீத்தியின் தலையை துளைத்த குண்டு


கிழக்கு டெல்லி பத்துர் கஞ்ச் தொழிற் பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பெண் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பிரீத்தி அக்லாவாத். 29 வயதாகிறது.

ரோகினி பகுதியில் தங்கி உள்ளார்.. நேற்றிரவு பெண் போலீஸ் டியூட்டி முடிந்து வீட்டுக்கு செல்ல மெட்ரோ ரெயில்வே ஸ்டேஷனில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

பாதுகாப்பு

அப்போது திடீரென ஒரு மர்மநபர், அவரை துப்பாக்கியால் சுட்டார்.. இதில் பிரீத்தி நிலை குலைந்து அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். 
டெல்லியில் இன்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பையும் மீறி இந்த கொலை நடந்தது தலை நகரையே அதிர வைத்தது. தகவலறிந்து உடனடியாக போலீசார் விரைந்தனர்.

தோட்டாக்கள்
தலையை துளைத்துக் கொண்டு போன தோட்டா


பிரீத்தியின் உடல் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப் பட்டது. மேலும் அங்கிருந்த 3 துப்பாக்கி குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்த போது, பிரீத்தியை சக இன்ஸ்பெக்டர் ஒருவரே சுட்டு கொன்றதை பார்த்து போலீசாரே அதிர்ந்து விட்டனர்.. 

அவரது பெயர் தீபன்ஷீ ரதி.. ஹரியானாவை சேர்ந்தவர்.. சோனிபட் ஸ்டேஷனில் அவரும் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார்.

தற்கொலை

ஆனால் பிரீத்தியை சுட்டுக் கொன்ற உடனேயே அந்த சப்-இன்ஸ்பெக்டரும் வீட்டுக்கு போய் தற்கொலை செய்து கொண்டார். 

வேலை பார்ப்பது வேற, வேற ஸ்டேஷன் என்றாலும் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர். 2018-ம் ஆண்டு பேட்ச் மெட்டுகளாக இருந்துள்ளனர்.
டெல்லியை அதிர வைத்த தோட்டா


அப்போது தான் பிரீத்தி மீது தீபன்ஷீக்கு காதல் வந்துள்ளது.. கல்யாணம் செய்து கொள்ளுமாறு பிரீத்தியிடம் கேட்க, அதற்கு அவர் மறுத்துள்ள தாக தெரிகிறது.

ஒருதலை காதல்

பிரீத்திக்கு அவரை பிடிக்கவில்லை.. ஒருதலை காதலால் தவித்த தீபன்ஷீக், அவரையும் கொன்று, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். 
டெல்லியின் மொத்த போலீசாரும் பாதுகாப்பில் உள்ள நிலையில், பல இடங்களில் பேரிகாட்களை போட்டு சோதனை செய்து வந்த நிலையில்.. 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தது பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings