கும்பகோணம் வாலிபர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை !

கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள வங்கியில் வேலை கிடைத்தது. 
கும்பகோணம் வாலிபர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை


பணியில் சேருவதற்காக ரயில் மூலம் சென்னை வந்தடைந்த அவர் பின்னர் அங்கிருந்து வேறொரு ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தார்.

இரவு நேரம் என்பதால் அங்கிருந்து தான் தங்கவுள்ள விடுதிக்கு செல்ல ஆட்டோவை தேடியுள்ளார்.

அப்போது குருமூர்த்தி (24) என்பவரது ஆட்டோவில் ஏறிய இளம்பெண் விடுதி இருக்கும் இடத்திற்கு செல்லுமாறு கூறினார். 

அதன் பிறகு ஆட்டோ இளம்பெண் கூறிய வழியில் செல்லாமல் செட்டி மண்டபம் பைபாஸ் வழியே சென்றுள்ளது. இதனால் குழப்படைந்த அப்பெண் குருமூர்த்தியிடம் ஏன் இந்த வழியாக செல்கிறீர்கள் என கேட்டார்.
ஆனால், அதற்கு குருமூர்த்தி எந்த பதிலும் சொல்லாமல் ஆட்டோவை வேகமாக இயக்கி யுள்ளார். பதறிப் போன இளம்பெண் தனது நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டு நடப்பவற்றை தெரியப் படுத்தினார். 

பின்னர் ஆட்டோவை நிறுத்துமாறு கூறிவிட்டு தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதி வழியிலேயே இறங்கி யுள்ளார். 

ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் ஒரு டூ வீலரை வருவதை கண்ட அப்பெண் அந்த வாகன ஓட்டியிடம் உதவி கேட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அந்த வண்டியை இன்னொரு டூ வீலரில் வந்த மூன்று பேர் ஃபாலோவ் செய்து வந்துள்ளனர். 
பின்னர் இரு வண்டியும் மறைவான இடத்திற்கு சென்ற பின்பு அந்த பெண்ணை வம்படியாக இழுத்து சென்ற நான்கு பேரும் கூட்டு பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். 

பின்னர் இது குறித்து இளம்பெண் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதை யடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து ஆட்டோ ஓட்டுநர் உட்பட நான்கு பேரையும் கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 

இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை முடிவுக்கு வந்தது.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எஸ். தினேஷ் (24), எம். வசந்த் (21), 

எஸ். புருஷோத்தமன் (19), எஸ். அன்பரசன் (19) ஆகிய நான்கு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை யுடன் தலா 65 ஆயிரம் ரூபாய் அபராததையும் விதித்து உத்தர விட்டார். 

மேலும் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 10 ஆயிரம் ருபாய் அபராதமும் விதிக்கப் பட்டது.
Tags:
Privacy and cookie settings