ஏன் ஒரு பக்கமா தலை வலிக்குது தெரியுமா? இந்த நோயே காரணம் !

ஏன் ஒரு பக்கமா தலை வலிக்குது தெரியுமா? இந்த நோயே காரணம் !

தலைவலி ரொம்பவே எரிச்சலான விஷயம் தான். அதிலும் சிலருக்கு எப்போதும் ஒற்றைத் தலைவலி யாகவே வரும். அதை வெறும தலைவலி தானே என்று கடந்து சென்று விடாதீர்கள். 
தலைவலி


அது தீவிரமடைந்தால் என்ன ஆகும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

​தலைவலி

தலைவலி என்றவுடன் உங்களுக்கு என்ன தோன்றும்?

பெரும்பாலானவர் களுக்கு தலையில் ஒரு ஆழமான மற்றும் கூர்மையான வலி ஏற்படும். இதனால் வேலையில் கவனமின்மை உண்டாகக்கூடும். 

தலைவலி எல்லா வயதினருக்கும் ஏற்படலாம். எந்த ஒரு சூழ்நிலையும் தலைவலிக்கு காரணமாக அமையலாம். தலைவலி ரொம்பவே எரிச்சலான விஷயம் தான். 
அதிலும் சிலருக்கு எப்போதும் ஒற்றைத் தலைவலியாகவே வரும். அதை வெறும தலைவலி தானே என்று கடந்து சென்று விடாதீர்கள். அது தீவிர மடைந்தால் என்ன ஆகும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

ஒற்றைத் தலைவலி

சிலருக்கு தலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வலி தோன்றும். தலையின் பின்புறம், நெற்றி அல்லது நெற்றியின் இரு பக்கங்களில் ஏதாவது ஒரு பக்கம் மட்டும் என்று தலையின் வெவ்வேறு இடங்களில் தலைவலி தோன்றும். 
ஒற்றைத் தலைவலி


ஒரே இடத்தில் பல்வேறு வகையான தலைவலி தோன்றலாம். தலைவலி ஏற்படும் இடத்தைக் கொண்டு,

இந்த பாதிப்பின் காரணம் மற்றும் நீங்கள் அதனை நிர்வகிக்க வேண்டிய வழிமுறை ஆகிய வற்றை அறிந்து கொள்ள முடியும். 

தலையின் ஒரு புறம் மட்டும் நீங்கள் வலியை உணரக் கூடியதற்கான காரணத்தை இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளலாம். 

ஒருபக்கத் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

​நரம்புக் கோளாறு

பல்வேறு வகையான நரம்பு தொடர்பான கோளாறுகள் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருக்க முடியும். 
மூளையில் உண்டாகும் சில பாதிப்புகள் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருக்க முடியும். அவை பின்வருமாறு..

ஆக்சிபிடல் நியுரால்ஜியா
​நரம்புக் கோளாறு


தலையில் துளை யிடுவது போன்ற வலி, மின்சார ஷாக் போன்ற வலி, துடிப்பது போன்ற வலி

போன்ற வற்றைக் கொண்ட ஒரு தனித்துவமான நாட்பட்ட வலியாக அடையாளம் காணப்படுவது ஆக்சிபிடல் நியுரால்ஜியா. 

முதுகு தண்டுவடத்தின் மேல்புறம் மற்றும் உச்சந்தலை க்கு மத்தியில் உள்ள நரம்புகளில் சேதம் அல்லது அழற்சி ஏற்படும் போது இந்த நிலை உண்டாகிறது.

​பொட்டெலும்பு தமனி அழற்சி

தலை மற்றும் கழுத்தில் உள்ள தமனிகளில் உண்டாகும் அழற்சி இது. இந்த வகை பாதிப்பால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் கடினத் தன்மை உண்டாகிறது. 
இந்த பாதிப்பைக் கொண்ட ஒரு நபர் தலையின் இரண்டு பக்கங்களில் ஒன்றில் வலியுடன் கூடிய இதர பின்வரும் அறிகுறி களையும் உணரலாம் . அவை, தசை வலி, சோர்வு, தாடை வலி போன்றவை யாகும்.

​ட்ரைஜீமினல் நியூரால்ஜியா
ட்ரைஜீமினல் நியூரால்ஜியா


இது ஒரு நாட்பட்ட வலியாகும், இது உச்சந்தலையில் இருக்கும் முக்கிளை நரம்பை பாதிக்கிறது.

இந்த முக்கிளை நரம்பு உங்கள் முகத்தி லிருந்து மூளைக்கு உணர்வைக் கொண்டு செல்கிறது, 

இந்த செயல்பாட்டில் இடையூறு ஏற்படுவதால் முகம் மற்றும் மூளையின் ஒரு பக்கத்தில் வலி உண்டாகிறது.

​மருந்துகள்

நீங்கள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் காரணமாக தலைவலி உண்டாகலாம். 
அளவுக்கு அதிகமாக மருந்துகள் உட்கொள்வதும் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். மருத்துவர் பரிந்துரைசீட்டு இல்லாமல் பொதுவாக பயன்படுத்தக் கூடிய தலைவலி மருந்துகள் சில இதோ.

அசிட்டமினோஃபென்

ஆஸ்பிரின்

ஐப்யூபுரூஃபன்

​இதர காரணங்கள்
​இதர காரணங்கள்


ஒருபக்கத் தலைவலி உண்டாவதற் கான மற்ற காரணங்கள் இதோ.

ஒவ்வாமை

சோர்வு

தலையில் உண்டாகும் காயம்

தொற்று பாதிப்பு

கட்டிகள்

​மருத்துவரை எப்போது அணுக வேண்டும் ?

பொதுவாக தலைவலி என்பது ஒரு தற்காலிக உடல் பாதிப்பாகும். மேலும் இது எந்த ஒரு மருந்தும் இல்லாமல் அடுத்த சில மணி நேரங்களில் தானாகவே குணமாகி விடக்கூடும். 

ஒரு வேளை தலைவலி தானாக குணமாக வில்லை என்றால் வலி நிவாரணி மருந்துகள் அல்லது வீட்டுத் தீர்வுகள் மூலம் அதனைப் போக்க முடியும். 
ஒரு நாளைக்கு இரண்டு வலி நிவாரணி மாத்திரைகளை விட அதிகம் பயன்படுத்த வேண்டாம். 

மேலும் உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு கூடுதலாக கண் பார்வையில் கோளாறு, குழப்பமான மனநிலை, காய்ச்சல், கழுத்து இறுக்கம், மரத்துப் போன உணர்வு அல்லது பலவீனம் ஆகிய வற்றை உணர்ந்தால் மருத்துவரை அணுகலாம்.
Tags: