பிரசிலில் வசித்து வருபவர் எல்விஸ் இவரது மனைவி கிறிஸ்டினா மார்க்ஸ். இவர்கள் இருவருக்கும் லூகாஸ் என்ற கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. 
தாய்ப்பால் கொடுத்த மறுநொடி


இவர்களின் குழந்தைக்கு சமீபத்தில் திடீரென்று உடல் நிலை மோசமானது. குழந்தையின் உடல் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியது.

மேலும் அந்த குழந்தையால் சரியாக சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறியது.

இதைக் கண்டு பதறிப் போன குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவ மனைக்கு சென்றார்கள். 

மருத்துவ மனையில் இருந்த போலீசார் குழந்தைக்கு முதலுதவி அளிக்க முன் வந்தார்கள்.
குழந்தையின் இந்த மோசமான நிலையை கண்டு முதலுதவி அளித்து கொண்டிருந்த நிலையிலேயே குழந்தைக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு மயங்கியது. 


இந்த நிலையில் பெண் அதிகாரி ஒருவர் குழந்தையின் வாயில் சுவாசம் ஊட்ட முயற்சி செய்து செய்திருக்கிறார்.

பின்னர் மற்றொருவர் குழந்தையின் முதுகில் தட்டிக் கொண்டே இருந்திருக்கிறார். 

அதைத் தொடர்ந்து ஒரு சில நிமிடங் களிலேயே குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது. 

இது குறித்து அவரது பெற்றோர்கள் தெரிவிக்கையில், தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து சில நிமிடத்திலேயே குழந்தையின் உடல் இவ்வாறு சிவப்பு நிறத்தில் மாறத் தொடங்கியது. 
மேலும் மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமப் பட்டது என்று தெரிவித்தி ருக்கிறார்.