விமான நிலையத்தில் கிடந்த பையில் வெடிகுண்டு - என்ன நடந்தது?

0
இன்று காலை மங்களூர் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம கருப்பு நிற பையில் வெடிகுண்டு சாதனங்கள் இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மர்ம கருப்பு நிற பையில் வெடிகுண்டு


இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் பெங்களூர், மைசூருக்கு அடுத்தபடியாக மங்களூர் அதிக மக்கள் வந்து செல்லும் மாவட்டம் ஆகும் . 

மங்களூர் விமான நிலையத்திற்கு அதிக வெளிநாட்டு பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் மங்களூர் விமான நிலையத்தில் கேட்பாரற்று கருப்பு நிற பை ஒன்று இன்று காலை கிடந்துள்ளது.

இதை கண்டுபிடித்த விமான நிலைய அதிகாரிகள், சந்தேகம் கொண்டு உடனடியாக வெடிகுண்டு நிபுணர் களுக்கு அழைப்பு விடுத்தனர். 
இதை யடுத்து அங்கு வேகமாக வந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.

வெடிக்குண்டு

அந்த கருப்பு நிற பையில் பேட்டரி, வயர், டைமர் வாட்ச், வெடி குண்டிற்கான சாதனங்கள், வெடிகுண்டை இயக்க செய்யும் டெடோன்டோர் கருவி, வெடிமருந்து எல்லாம் இருந்துள்ளது. இதனால் உடனடியாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப் பட்டனர்.

அசம்பாவிதம்

வெடிகுண்டு நிபுணர்க ளுடன் சேர்த்து மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைதான் இந்த சோதனையை செய்தது. 
ஆனால் இந்த குண்டு அப்போது செயல்படும் நிலையில் இல்லை. இதனால் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பாதுகாப்பு படை
பாதுகாப்பு படை


இதன்பின் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை சோதனை செய்தது.

அதில், ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர், இந்த வெடிகுண்டு பையை வைத்து விட்டு சென்றது கண்டு பிடிக்கப் பட்டது. 

இண்டிகோ விமான புக்கிங் கவுண்டருக்கு அருகே இவர் அந்த பையை வைத்து விட்டு சென்றுள்ளார்.

யார் இவர்

இவர் யார் என்று மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த ஆட்டோ எண்ணை வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 
தற்போது மங்களூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடந்து வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings