தாருமாராக ஓடும் குதிரையை கட்டுப்படுத்த முயன்ற இளைஞர் - வைரல் !

0
சமூக வலை தளங்களில் பல வைரல் வீடியோக்கல் பகிரப்பட்டு வருகின்றன. சில வீடியோக்கள் நகைச் சுவையாகவும், சில வீடியோக்கள் சாகசமாக வும் இருக்கும். 
தாருமாராக ஓடும் குதிரை


இதை பார்க்கும் மக்களுக்கு மகிழ்ச்சியும், வியப்பும் இருக்கும். ஆனால், சில வைரல் வீடியோக்கள் மனிதர்களை அச்சுறுத்தும் விதமாக இருக்கும்.

விபத்து சம்பவங்கள் வைரலாக வரும்போது, அது பார்ப்பவர் களின் மனதை மிகவும் பாதிக்கும். 

சில சமயங்களில் காமெடியாக செய்யும் சில விஷயங்கள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். புனேவிலும் அதே போன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.

சாலையில் ஓடிய குதிரை

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலை நகரான புனேவில் உள்ள பண்ட் கார்டன் பிரிட்ஜ் சாலையில் வண்டியில் பூட்டப்பட்ட இரண்டு குதிரைகள் கட்டுக் கடங்காமல் ஓடிக் கொண்டிருந்தது. 

தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து ஓடும் குதிரையைச் சாலையில் இருபுறமும் இருந்த மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். குதிரை வண்டிக்குப் பின்னாள் வந்த வாகனங்கள் இதை வீடியோ பதிவு செய்தனர்.

பைக்கில் துரத்திய இளைஞர்
கட்டுப்படுத்த முயன்ற இளைஞர்


அந்த வீடியோ பதிவில், கட்டுக் கடங்காமல் சாலையில் ஓடிக் கொண்டிருந்த குதிரையைப் பிடிக்க முயன்றனர் மூன்று இளைஞர்கள். பைக்கில் மூன்று பேரும் குதிரை வண்டியை துரத்திக்கொடு வந்தனர்.

இதில், ஒரு இளைஞர் பைக்கில் சென்று கொண்டே குதிரையைப் பிடிக்க முயன்றார்.

அப்போது, குதிரை நிலை தடுமாறி கீழே விழுந்ததில், அந்த இளைஞரையும் இழுத்தது.

இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

கீழே விழுந்த இளைஞர் எதிர்பாராத விதமாகக் குதிரை வண்டியின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டார். வண்டியின் இரண்டு சக்கரங்களும் அவர் மீது ஏறியதுடன் இந்த வீடியோ காட்சி முடிந்தது. 

இதில், அவர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படு கிறது. சில நேரங்களில் நால் விளையாட்டாக செய்யும் சில விஷயங்கள் கூட நமக்கு விபரீதமாக முடிந்து விடும் என்பதை இந்த வீடியோ காட்சி நிரூபித்துள்ளது.

வைரல் வீடியோ
இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்
இந்த வீடியோவை பார்க்கும் அனைவர் மனதிலும் அச்சம் உண்டாகும். இதே போல வேறு யாரும் செய்ய வேண்டாம் என்று இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

நிறைய பேர் இதற்கு கருத்து தெரிவித்து வீடியோவை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருவதால் இந்த வீடியோ வைராலாகி வருகிறது.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)