ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை - அமித்ஷா உறுதி !

0
ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வரிடம் உறுதியளித் துள்ளதாக அதிமுகவின் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
நமது அம்மா நாளிதழில்


தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 19ம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது, 

அப்போது குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும், ஈழத்தமிழர் களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான் 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் நிலைப்பாடு. எனவே தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடு அதே தான் என்ற கோரிக்கை முதல்வர் பழனிசாமி முன் வைத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விரைவில் மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் சரியான நேரத்தில் இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என 
ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை


தமிழக முதலமைச்சரிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித் துள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப் படுவதாகவும், 23-ம் தேதி திமுக தலைமையிலான எதிர் கட்சிகளின் பேரணியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுப்பதற் கான 

உரிய பாதுகாப்பு எற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடம் முதலமைச்சர் தெரிவித்துள்ள தாக நமது அம்மா நாளிதழில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings