சாக போகிறோம் என்று தெரிந்தே தற்கொலைக்கு துணிந்த பிள்ளைகள் !

0
சாக போகிறோம் என்று தெரிந்து தான் 2 குழந்தைகளும் பெற்றோருடன் ரயில் முன் விழுந்துள்ளன... தற்கொலைக்கு முன்பு ஓட்டலுக்கு போய் வயிறார சாப்பிட்டு வந்து 4 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 
தற்கொலைக்கு துணிந்த பிள்ளைகள்


மகன் கையை அப்பா பிடித்து கொள்ள... மகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. 4 பேருமே ரயில் முன் போய் விழுந்தனர்.

நேற்று ஒரே நாளில் 2 சம்பவம் தமிழக மக்களை உலுக்கியது.. விழுப்புரத்தில் 3 சீட்டு லாட்டரி வாங்கி கடன் கழுத்தை நெறிக்க.. ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.. 

சாக போகிறோம் என்று தெரியாமலேயே அந்த 3 பிஞ்சுகள் சயனைடு கொடுக்கப்பட்டு இறந்தன. ஆனால், கொடைக்கானலில் 2 பிள்ளைகளும் தெரிந்தே தான் தற்கொலைக்கு துணிந்துள்ளனர். 

உறையூரை சேர்ந்த உத்தராபதி - சங்கீதா தம்பதி. இவர்களுக்கு 18 வயதில் அபினயஶ்ரீ என்ற மகளும், 13 வயதில் ஆகாஷ் என்ற மகனும் இருந்தனர்.

கோயில்

இவர்களுக்கும் கடன் பிரச்சனை தான்.. வாழ முடியாத அளவுக்கு கடன் விரட்டி கொண்டு வந்துள்ளது.. தற்கொலை முடிவுக்கு எல்லோருமே வந்து விட்டனர். 

ஆனால், அதற்கு முன்பாக சாமி கும்பிட்டு விட்டு சாகலாம் என்று முடிவெடுத்தனர்.

உச்சி பிள்ளையார்


கோயில், குளம் சுற்றுலாதலம், என்று எங்கெங்கோ சுற்றி வந்துள்ளனர்..

கடைசியாக கார்த்திகை தீபம் அன்று திருச்சி மலைக் கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலுக்கு போனார்கள்.. அங்கிருந்து தான் ரயில்வே ஸ்டேஷனு க்கு வந்திருக்கி றார்கள்.

கொடைக்கானல்

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஏறி, கொடை ரோடுவே ஸ்டேஷனில் இறங்கினார்கள்.. அங்கிருந்து கொடைக்கானலு க்கும் போனார்கள்.. ஒரு நாள் முழுக்க கொடைக்கானலை சுற்றி பார்த்தனர்... 

சாயங்காலம் திரும்பவும் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தனர்.. அங்கே ஒரு ஹோட்டலில் 4 பேரும் வயிறு நிறைய சாப்பிட்டார்கள்.. 

அதன் பிறகு ஹோட்டலில் இருந்து வெளியே வந்து சாயங்காலம் 7 மணியில் இருந்து பிளாட் பாரத்திலேயே நின்றிருந்தனர்.

உடல் பாகங்கள்
சாக போகிறோம் என்று தெரிந்தே


இரவு 11 மணியை தாண்டி கொண்டிருந்தது.. அப்போது தான், மதுரை- திண்டுக்கல் ஸ்பெஷல் ரயில் வந்தது..

உத்திராபதி மகன் ஆகாஷின் கையையும், சங்கீதா மகள் அபினயஸ்ரீ யின் கையையும் பிடித்து கொண்டனர்.. 

அந்த ரயில் அருகில் வந்ததுமே மொத்தமாக 4 பேருமே ஒரே நேரத்தில் போய் அதற்கு முன்பாக பாய்ந்து விட்டனர்.. உடல் பாகங்கள் சிதறி போய் விழுந்தன.

டிக்கெட்டுகள்

விழுந்து கிடந்த ஆதார் கார்டை வைத்து தான், இறந்தவர்கள் அடையாளம் தெரிய வந்தது.. 2 நாளைக்கு முன்னாடி திருச்சியில் இருந்து கொடைரோடு வருவதற்கு எடுக்கப்பட்ட ரயில் டிக்கெட் முதல், 

கொடைக்கான­லில் இருந்து பெருமாள் மலைக்கு சென்ற டிக்கெட்டுகள் வரை உத்திராபதியின் பாக்கெட்டில் நிரம்பி வந்தன. 

ரயில்வே போலீசாரின் விசாரணை தீவிரமாக இருந்தாலும், இன்னும் கொடைக்கானல் தற்கொலை சம்பவம் மக்களின் மனதை விட்டு அகலவே இல்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings