நமக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்குமா? தகுதிகள் என்ன?

0
இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் நம்மை இந்தியக் குடிமகனாகக் கருத முடியுமா? திடீரென நம்மை நாட்டைவிட்டு வெளியேற்றி விடுவார்களா? 
நமக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்குமா?


போன்ற பல குழப்பங் களுக்கு 2009 குடியுரிமை விதிகளைக் கையாட்டி யுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

இந்த விதிமுறைகள்தான் NRC என்னும் தேசிய குடியுரிமை பதிவின் போது பின்பற்றப்படும் எனக் கூறப்படுகிறது.

அந்த விதிமுறையின் கீழ்:

1. ஜனவரி 26, 1950 அன்று அல்லது அதன் பின்னர். ஆனால், ஜூலை 1, 1987-க்கு முன் பிறந்திருக்க வேண்டும்.

2. இந்தியாவில் ஜூலை 1, 1987 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்தோர். ஆனால், டிசம்பர் 3, 2004-க்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும். 

குறிப்பாக நீங்கள் பிறக்கும் போது உங்களது பெற்றோரில் ஒருவர் இந்தியராய் இருந்திருக்க வேண்டும்.

3. டிசம்பர் 3, 2004 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்திருந்தால், உங்களது பெற்றோர் இருவரும் இந்தியராய் இருத்தல் வேண்டும் அல்லது 


நீங்கள் பிறந்த போது உங்களது பெற்றோரில் ஒருவர் இந்தியராய் இருந்திருக்க வேண்டும்

மற்றும் உங்களது பெற்றோரில் ஒருவர் கூட சட்டத்துக்குப் புறம்பான முறையில் இந்தியாவுக்கு வந்திருக்கக் கூடாது.

இது 2009-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் விதிகள் ஆகும். இது மாறுதலுக்கும் உரியதுதான் என்ற கூற்றும் உள்ளது.

NRC பதிவில் பிறப்புச் சான்றிதழ் அல்லது முனிசிபாலிட்டி சார்ந்த சான்றுகள் இருந்தால் போதும். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் என எதுவும் செல்லாது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)