அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம் லாட்டரியில் 6 கோடி ரூபாய், நிலத்தில் புதையல் !

0
கேரளாவின் 66 வயதான ரத்னகாரன் பிள்ளை என்பவர் கடந்த ஆண்டு லாட்டரி டிக்கெட் வாங்கி யுள்ளார். அதில் அதிர்ஷ்டமாக 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம்


அந்த பணத்தை உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்த அவர் வீட்டின் அருகே நிலம் வங்க முடிவு செய்துள்ளார்.

அந்த நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

எனவே, பழைய கிருஷ்ணர் கோவில் அருகே 27 செண்ட் நிலத்தை வாங்கி யுள்ளார். அதில் மரவல்லிக் கிழங்கை மண்ணில் புதைக்க நிலத்தைத் தோண்டி யுள்ளார்.

தோண்டிய போது பானையில் தட்டும் சத்தம் கேட்டுள்ளது. மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற ரத்னகாரன் அதை பொருமை யாக தோண்டி வெளியே எடுத்துள்ளார். 

அதை திறந்து பார்த்த போது 100 ஆண்டுகள் பழமையான நானயங்கள் இருந்துள்ளன. கிட்டத்தட்ட 20 கிலோ 400 கிராம் எடை கொண்ட 2,595 பண்டைய நாணயங்கள் இருந்துள்ளன.
லாட்டரியில் 6 கோடி ரூபாய், நிலத்தில் புதையல்


உடனே உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்களுடன் தொல்பொருள் துறை அதிகாரிகளும் வந்து அந்த நாணயங் களை சோதனை செய்துள்ளன.

அதில் 1885 முதல் கடைசியாக திருவிதாங்கூரை ஆட்சி புரிந்த ஸ்ரீ சித்திரா திருனல் பால ராம வர்மாவின் 1949 ஆம் ஆண்டு வரையிலான நாணயங்கள் என கண்டறிந் துள்ளனர். 

பின் அந்த நாணயங்கள் அரசிடம் ஒப்படைக்கப் பட்டது. இந்த புதையல் ரத்னகாரன் பிள்ளையின் நிலத்தில் கண்டெடுக்கப் பட்டது என்பதால், அவருக்கு சட்ட விதிமுறைக ளின்படி சன்மானம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings