தான் இருக்கும் இடத்தை வெளியிட்ட நித்யானந்தா !

0
சர்ச்சைகளு க்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது புதிதாக ஒரு கடத்தல் புகார் எழுந்தது. 
இருக்கும் இடத்தை வெளியிட்ட நித்யானந்தா

பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 4 மகள் களையும் நித்தியானந் தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். 

அவரது அனுமதி இல்லாமல் 4 மகள் களையும் குஜராத் மாநிலம் அகமதாபாத் தில் உள்ள ஆசிரமத்துக்கு மாற்றி உள்ளனர்.

ஜனார்த்தன சர்மா அகமதாபாத் ஆசிரமத்துக்கு சென்ற போது மகள்களை காண ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்க வில்லை. 

இதை யடுத்து ஜனார்த்தன சர்மா குஜராத் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஆசிரமத்துக்கு சென்று ஜனார்த்தன சர்மாவின் 2 மகள் களை மீட்டனர்.

ஆனால் அவரது மூத்த மகள் லோபமுத்ரா மற்றும் நந்திதா ஆகிய இருவரும் பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டனர். 

அவர்களை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார்.
நித்தியானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனம்

இதற்கிடையே மீட்கப்பட்ட குழந்தைக ளிடம் நடத்திய விசாரணை யின் அடிப்படையில் நித்யானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது கடத்தல், சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் ஆசிரம நிர்வாகி களான ப்ரயான் பிரியானந்தா, பிரியதத்துவா ரித்திகிரண் என்ற 2 நிர்வாகி களை கைது செய்தனர்.

குழந்தை களை கடத்தி அவர்கள் மூலம் ஆசிரமத்துக்கு நிதி திரட்டிய தாக நித்யானந் தாவை போலீசார் தேடி வருகின்றனர். அவர் வெளிநாட்டு க்கு தப்பி சென்று விட்டதாக தகவல் பரவியது. 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் லோப முத்ரா, நந்திதா ஆகியோர் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர்கள் வெளிநாட்டில் இருப்பது தெரிய வந்தது.

எனவே நித்யானந் தாவும் வெளிநாட்டு க்கு தப்பி சென்றிருக்க லாம் என குஜராத் போலீசார் கருதுகின்றனர். 

நித்யானந் தாவை கைது செய்வதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தப்பி ஓடிய நித்யானந்தா

இந்த நிலையில் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு வீடியோ வெளியட்டுள்ளார். அதில், குழந்தை களை கடத்தி வைத்துள்ள தாக கூறப்படும் குற்றச் சாட்டுக்கு மறுப்பு தெரிவித் துள்ளார். 

வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது அனைத்து குரு குலத்திலும் அனைத்து பெற்றோர் ளுக்கும் அவர்களது குழந்தை களிடம் எப்போது வேண்டு மானாலும் பேச அனுமதி உள்ளது. 

இதனால் எனது அனைத்து குருகுலமும் எப்போதும் திறந்தே இருக்கும். நிறைய பெற்றோர்கள் எனது ஆசிரமத் திலேயே தங்கி உள்ளனர்.

இந்தியாவில் நீதியைப் பெற நீண்ட காலமாகும். மேலும் அதிகம் செலவழிக்க வேண்டும். எனது சீடர்களுக்கு கடும் துன்புறுத்தல் அளிக்கப் படுகிறது. 

இது போன்ற தொடர் துன்புறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் இனி எதிர் காலத்தில் ஏற்படாமல் இருக்க உலகில் எங்காவது ஒரு மூலையில் காணி நிலம் எனக்கு அளிக்க வேண்டும்.

அந்த இடத்தில் நானும், எனது சீடர்களும் வேத ஆகம ரீதியிலான ஆன்மீக பயிற்சியில் அமைதியாக ஈடுபடுவோம்.
ஆசிரமத்திலேயே தங்கி உள்ளனர்

நான் யாருக்கும் எதிரி அல்ல. இந்து மதத்தை வெறுப்ப வர்களும், நாட்டை வெறுப்ப வர்களும் எனக்கு எதிராக மிகப்பெரிய சதியில் இறங்கி உள்ளனர்.

நான் மனித உரிமை ளுக்கும், குழந்தைகள் நல உரிமை ளுக்கும் எதிரானவன் அல்ல. எனது குருகுலத்தில் அகிம்சை வழியிலான பயிற்சிகள் மட்டுமே கற்பிக்கப் படுகிறது. 

அங்கு எந்தவித துன்புறுத்த ல்களும் நிகழவில்லை. நான் தற்போது இமய மலையில் இருக்கிறேன். மிகப்பெரிய ஆன்மீக செயலை செய்து முடிப்பதற் காக நான் உயிரோடு இருக்க வேண்டும்.

பரமசிவனும், கால பைரவரும், மகா காளியும் அதை விரும்புகி றார்கள். தினசரி காலையில் சத்சங்கம் மூலம் உலகம் முழுவதும் உள்ள எனது சீடர்களை தொடர்பு கொள்கிறேன்.

அதை தவிர எனது சீடர்களுக்கு நான் எந்தவித தனிப்பட்ட ஆலோசனை களையும் வழங்குவ தில்லை.இ வ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings