காக்னிஸண்டைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஆயிரக் கணக்கில் ஊழியர் களைப் பணி நீக்கம் செய்ய திட்ட மிட்டுள்ள தாகத் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட் டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் (ஐ.டி) துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ், 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர் களை பணி நீக்கம் செய்ய திட்ட மிட்டுள்ளது.
குறிப்பிட்ட படிநிலையில் பணிபுரியும் ஊழியர்கள் என இல்லாது பல்வேறு படிநிலைகளில் இருந்தும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வுள்ளனர்.
இது தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.
"ஒரே சமயத்தில் அதிகளவில் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட போவதில்லை.
அதிக உற்பத்தி கொண்ட நிறுவன மென்பதால், சில சமயங்களில் உற்பத்தி திறன் குறைவது இயல்பானது. இதனை பணி நீக்கத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது," என விளக்கம் அளித்துள்ளது. BBC...


Thanks for Your Comments