ராஜஸ்தானில் சுமார் 1,500 பறவைகள் மர்மமான முறையில் இறந்தன !

0
ராஜஸ்தானில் உள்ள சம்பர் ஏரிக்கரையோரம், சுமார் 1,500 பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
1,500 பறவைகள் மர்மமான முறையில் இறந்தன


ஜெய்ப்பூர் அருகேயுள்ள மிகப்பெரிய சம்பர் உப்பு ஏரிக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் புலம் பெயர்ந்து வருவதுண்டு. 

அந்த வகையில் இந்தாண்டும் ஏரிக்கரையோரம் ஏராளமான பறவைகள் சுற்றித் திரிந்த நிலையில், ஞாயிற்று கிழமை சுமார் 10 வகைகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பறவைகள் இறந்து கிடந்தன.

பறவைகள் கொத்து கொத்தாக மடிந்து கிடந்த தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், உயிரிழப்புக் கான காரணம் அறிய அதன் உடல்கள் மற்றும் உப்பு ஏரியின் நீரை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்டமாக கடந்த சில தினத்துக்கு முன் வீசிய ஆலங்கட்டி மழையில் (Hailstorm) பறவைகள் உயிரிழந்தி ருக்கலாம் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏரித்தண்ணீரின் மோசமான தரம் கூட பறவைகள் உயிரிழக்க காரணமாக இருந்திருக் கலாம் எனவும் கூறப்படு கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)