சசிகலாவிடம் இருந்து விலக முடிவு... ஆலோசனையில் எடப்பாடி !

0
24-ந் தேதி கூட இருக்கும் அ.தி.மு.க. பொதுக் குழுவில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த வியூகங்கள் தான் பிரதானமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். 
அதிமுக சசிகலாவிடம் இருந்து விலக முடிவு

அதற்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப் படலாம் என்று தெரிவிக் கின்றனர். 

அப்புறம், பொதுக் குழுவிலேயே கட்சியின் பொதுச் செயலாளராக ஆக வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்த முதல்வர் எடப்பாடி, நிலைமையை நினைத்து, இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்ப தாக சொல்லப் படுகிறது . 

ஓ.பி.எஸ். இ.பி.எஸ்.சின் கூட்டுத் தலைமையே தொடரும். சசிகலாவைக் கட்சியில் சேர்க்கும் தீர்மானம் எதுவும் பொதுக்குழுவில் இருக்காது என்றும் கூறுகின்றனர். 

உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி னால் தான் வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலைத் தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்று எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் நினைப்பதாக சொல்லப் படுகிறது. 

அது சம்பந்தமாக பொதுக்குழு வில் ஆலோசனை இருக்கும் என்கின்றனர். மேலும் மேயர், சேர்மன் சீட்டுக்கு கலெக்ஷன் ஜரூராக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இது பற்றி விசாரித்த போது, மாஜி மந்திரியான தளவாய் சுந்தரம், தன்னோட குமரி மாவட்ட எல்லையைத் தாண்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அரசியலிலும் 

மூக்கை நுழைப்பது, அந்தப் பகுதி அ.தி.மு.க. வினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி யிருப்பதாக கூறுகின்றனர். 

இப்படி பல பகுதிகளி லிருந்தும் வரும் புகார்களை எப்படி சரி பண்ணுவது என்கிற ஆலோசனை யில் எடப்பாடி இருப்ப தாகவும் கூறுகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings