சேலம் பெண் கொலையில் கிரேன் ஓட்டுருக்கு தொடர்பா?

0
நாமக்கல் அருகே, சேலம் பெண் கொலை செய்யப்பட்டு, திருப்பூர் அமராவதி ஆற்றங் கரையில் வீசப்பட்ட வழக்கில் கிரேன் வாகன ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சேல‌ம் பெண் கொலை

நாமக்கல் செம்பாளிகரடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவருடைய மனைவி திருமங்கை (26). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. 

இவர்கள், சேலம் புதிய பேருந்து நிலையம் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கம் அருகே இரவு நேர உணவகம் வைத்திருந்தனர்.

நவ. 15ம் தேதி, திருப்பூர் மாவட்டம் மூலனூர் அமராவதி ஆற்றின் கரையோரம் திருமங்கை சடலமாகக் கிடந்தார். அவருடைய இரு கைகளும் கட்டப்பட்டு இருந்தன. 

முகத்தில் காயங்கள் இருந்தன. இது குறித்து மூலனூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே திருமங்கை கொலை செய்யப்பட்ட விவரம், அவருடைய புகைப்படம் ஆகியவை சமூக ஊடகங்களில் வெளியானது.

இது, திருமங்கை யின் கணவர் ரமேஷின் செல்போனுக்கும் கிடைத்தது. இதை யடுத்து ரமேஷ், மூலனூர் காவல்் துறைை யினரிடம் மனைவியின் சடலத்தை அடையாளம் காட்டினார். 

சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்ததில், அவர் கொலை செய்யப் பட்டிருப்பது தெரிய வந்தது.

திருமங்கை யின் செல்போனில் பதிவான எண்கள், அவரிடம் அடிக்கடி பேசியவர் களின் பட்டியல் ஆகிய வற்றை எடுத்து விசாரணை நடத்தினர். 

நவ. 14ம் தேதி மாலை, திருமங்கைை யின் செல்போன் எண், நாமக்கல் - சேலம் சாலையில் நீண்ட நேரமாக பயன் பாட்டில் இருந்தது தெரிய வந்தது.

அதனால் இந்த வழக்கை நாமக்கல் மாவட்ட காவல் துறையினரும் விசாரித்து வந்தனர். 

நவ. 14ம் தேதியன்று இரவு அவர் உணவகக் கடை திறக்க வில்லை என்பதையும் காவல் துறையினர் உறுதிப் படுத்தினர். 

திருமங்கை யின் கடை அருகில் உள்ளவர் களிடமும் விசாரணை நடந்தது. இதில், சேலம் அம்மா பேட்டையை சேர்ந்த கிரேன் ஓட்டுநர் தனபால் (25) என்பவருடன், 

திருமங்கைக்கு தொடர்பு இருந்து வந்ததும் தெரிய வந்தது. அதை யடுத்து தனபாலை பிடித்து விசாரித்த போது, முதலில் திருமங்கை யாரென்றே தெரியாது என்று அடம் பிடித்தவர், 

பின்னர் அவரை கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். காவல் துறையில் தனபால் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்ப தாவது:

நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து, கடந்த இரண்டு ஆண்டாக தங்கி இருக்கிறேன். 

கிரேன் வாகனம் ஓட்டி வரும் போது எனக்கும் திருமங்கை க்கும் பழக்கம் ஏற்பட்டது.

அவரும் அடிக்கடி என்னை பார்க்க என் அறைக்கு வந்து செல்வார். 

அப்போது நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்திரு க்கிறோம். 

ஆனால் திருமங்கை க்கு வேறு சிலருடனும் நெருக்கமான தொடர்பு இருப்பது போல் எனக்கு கொஞ்ச காலமாக சந்தேகம் இருந்து வந்தது. 

கடந்த 17ம் தேதி மாலை 4 மணிக்கு அவர் என்னை தேடி வந்தபோது, வேறு ஒரு நபருடன் பேசி வருவது குறித்து கேட்டேன். இதற்கு திருமங்கை மறுப்பு தெரிவித்து என்னிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்து அவருடைய கழுத்தை இறுக்கிக் கொலை செய்தேன்.

பின்னர் அறையைப் பூட்டி விட்டு, வெளியே சென்று விட்டேன். 

அன்று நள்ளிரவு ஒரு மணியளவில், என் நண்பர் ஒருவரின் உதவியுடன்

திருமங்கை யின் சடலத்தை ஏற்றிக் கொண்டு மூலனூர் பகுதிக்குக் கொண்டு சென்று, அமராவதி ஆற்றங்கரை யோரம் வீசி விட்டு சென்று விட்டேன்.

மூலனூர் பகுதியில் திருமங்கையின் சித்தி வீடு இருப்பதால், அவர்கள் மீது காவல் துறையினரின் சந்தேகம் திரும்பும் எனக்கருதி சடலத்தை அந்த இடத்தில் போட்டு விட்டோம். 

இவ்வாறு தனபால் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவல் துறையினர் கூறினர். இதை யடுத்து கொலையாளி தனபாலை காவல் துறையினர் கைது செய்தனர். 

இரண்டே நாளில் குற்றவாளியை கைது செய்த காவல் துறையினரை நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு பாராட்டினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)