சென்னையில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் !

0
சென்னையில் பார்ட்டி என்ற பெயரில் பேராசிரியையை அழைத்துச் சென்று நிர்வாணப் படுத்தி வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
நிர்வாணமாக்கி வீடியோசென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவேஷ். 23 வயதாகும் இவர், தான் பனிபுரியும் நிறுவனத்திற்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போதே, மாமல்ல புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தும் வந்துள்ளார்.

அதே கல்லூரியில் உதவி பேராசிரியை யாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் பணிபுரிந்து வந்தார். விவேஷும் உதவி பெண் பேராசிரியையும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில், விவேஷ் தனது படிப்பு நிறைவு பெறுவதாகவும், அதற்கு பார்ட்டி கொடுக்க இருப்பதாகவும் கூறி பேராசிரியையை வெளியே அழைத்துள்ளார். நண்பன் தானே என்ற முறையில், விவேஷ் அழைப்பிற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்துள்ளார். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அருகே உள்ள சவுக்கு தோப்புக்கு அழைத்துச் சென்று இருள் சூழ்ந்த இடத்தில் வண்டியை நிறுத்தி யுள்ளார்.

இதனால், பதற்ற மடைந்த பேராசிரியை, இங்கே எதற்கு அழைத்து வந்தாய் என கேட்டதற்கு, உள்ளே ஒரு விடுதி இருப்பதாகவும், அங்கு தான் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ள தாகவும் கூறியுள்ளார்.

பேசிக்கொண்டிருக்கை யிலேயே, மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி உடைகளை களையுமாறு பேராசியையை வற்புறுத்தி யுள்ளார். இதனால் அதிர்ந்து போன அந்த பேராசிரியை விவேஷ் இடம் கெஞ்சி யுள்ளார். 
ஆனால் விடாத விவேஷ் பேராசிரியை நிர்வாணப் படுத்தி அதை செல்போன் டார்ச் வெளிச்சத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பின்பு, தன்னுடைய இருசக்கர வாகனத்திலேயே, அழைத்துச் சென்று பேராசிரியை யின் விடுதியில் விட்டுவிட்டு, நடந்ததை வெளியில் சொல்லக் கூடாது, மீறினால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி யுள்ளார்.அடுத்த நாள் பேராசிரியைக்கு போன் செய்த விவேஷ், தன்னோடு உல்லாசமாக இருக்க வேண்டும் என வற்புறுத்தி யுள்ளார். இதனால், அதிர்ந்து போன பேராசிரியை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தைரியமாக புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலிசார் விவேஷை பிடித்து அவரின் மொபைல் போனை பறிமுதல் செய்து, அதில் இருந்த பேராசிரியையின் நிர்வாண வீடியோவை அழித்தனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பேராசிரியை க்கு சென்னையில் யாரும் இல்லாததால், புகார் அளிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் அத்து மீறியதாக கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !