ஆட்டோ ரன்னிங்கில் சக்கரத்தை மாற்றிய இளைஞர்கள் !

0
ஆட்டோ ஓடிக்கொண்டி ருக்கும் போதே அதன் சக்கரத்தை மாற்றும் இளைஞர்களின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆட்டோ ஓட சக்கரம் மாற்றும் வீடியோ



ஆட்டோ ஓட ஓட அதன் சக்கரத்தை மாற்றும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு சமூக வலை தளங்களில், ஆயிரக் கணக்கான பார்வை யாளர்களின் கவனத்தை இந்த வீடியோ ஈர்த்துள்ளது. 

இது ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல் ஸ்டண்ட் என ஒரு சிலர் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் இதுபோன்ற ஸ்டண்ட்கள் மிகவும் அபாயகர மானது என சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற ஸ்டண்ட்களை செய்யும் போது விபத்து நிகழ்ந்தால், பலர் பாதிக்கப் படுவார்கள் என்பது எதிர்ப்பு தெரிவிப்ப வர்களின் கருத்தாக உள்ளது.

எது எப்படியோ இதுபோன்ற வீடியோக் களை பார்ப்பது என்பது மிகவும் 'த்ரில்' ஆக இருக்கும். அதை யாராலும் மறுத்து விட முடியாது. இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 19ம் தேதி இணையத்தில் தென்பட்டது.
அதன்பின் மெல்ல மெல்ல பிரபலமாக தொடங்கியது. தற்போது ஆயிரக் கணக்கான லைக் மற்றும் ஷேர்களை இந்த வீடியோ பெற்றுள்ளது. பழைய மஞ்சள் நிற ஆட்டோ ஒன்று சாலையில் பயணிக்கும் காட்சியுடன் இந்த வீடியோ தொடங்குகிறது. 

இந்த வீடியோ எங்கே எடுக்கப் பட்டது? என்பது தெரிய வில்லை. ஆனால் இது டிவிஎஸ் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட பழைய ஆட்டோ போல் தெரிகிறது.

இதனிடையே சில வினாடிகள் கடந்த பிறகு, ஆட்டோ டிரைவர் பின்பக்க வலது சக்கரத்தை அலேக்காக தூக்குகிறார். இதன் பின் ஆட்டோ ஒரு பக்கம் சாய்ந்தவாறே பயணிக்கிறது. 
விற்பனை செய்யப்பட்ட பழைய ஆட்டோ



பின்பக்க வலது சக்கரம் காற்றில் இருந்த சூழலில், ஆட்டோவிற்கு உள்ளே இருந்து வந்த நபர் ஒருவர் போல்ட்டுகளை தளர்த்தி சக்கரத்தை கழற்றுகிறார்.

அந்த சமயத்தில் மற்றொரு ஆட்டோ அங்கே வருகிறது. இரண்டாவது ஆட்டோவில் ஸ்பேர் சக்கரத்தை கொண்டு வந்த நபர் அதனை முதலாவது நபரிடம் கொடுக்கிறார். 

அதனை பெற்ற உடனேயே முதலாவது நபர் அதனை ஆட்டோவில் பொருத்துகிறார். இந்த வேலை முடிவடைந்ததும் ஆட்டோ நிற்கிறது. ஆனால் அப்போதும் கூட பின்பக்க வலது சக்கரம் காற்றிலேயே தான் இருக்கிறது.

உண்மையில் இது மிக சிறப்பான ஒரு ஸ்டண்ட்தான். ஆனால் இது மிகவும் அபாயகர மானது என்பதையும் மறுத்து விட முடியாது. 

இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்ன வென்றால் இந்த ஸ்டண்ட் பொது சாலையில் செய்யப் பட்டுள்ளது. இத்தனைக்கும் அந்த சாலை காலியாகவும் இல்லை. சிறிய 2-லேன் நெடுஞ் சாலையில் இந்த ஸ்டண்ட் செய்யப் பட்டுள்ளது.

இந்த சாலையின் இரு புறமும் வீடுகள் வேறு இருக்கின்றன. உண்மையில் ஸ்டண்ட் செய்த ஆட்டோ நிற்கும் போது அதன் பின்னால் மேலும் சில வாகனங்கள் வந்து நிற்கின்றன. 

ஒரு வேளை ஆட்டோ டிரைவர் கட்டுப்பாட்டை இழந்திருந்தால் பலர் காயமடைந் திருக்கலாம். உயிரிழப்புகள் கூட நிகழ்ந்திருக் கலாம். ஒரு வாகனம் ஓட ஓட அதன் சக்கரத்தை மாற்றும் ஸ்டண்ட்டை செய்வது இது முதல் முறையல்ல.
ஆட்டோவில் ஸ்பேர்



இதற்கு முன்பு சிலர் இது போன்ற ஸ்டண்ட்களை செய்துள்ளனர். கார் 2 சக்கரங்களில் ஓடி கொண்டிருக்கும் போது, அதன் வீலை மாற்றும் வீடியோக்கள் இதற்கு முன்பு வெளியாகி யுள்ளன. 

ஆனால் ஆட்டோரிக்ஸா ஒன்றில் இது போன்ற ஸ்டண்ட்டை செய்வது கேமராவில் சிக்கி யிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம் என தெரிகிறது. 

இது த்ரில் ஆக இருக்கலாம். அதேபோல் பார்ப்பதற்கும் வேடிக்கை யாகவும் இருக்கலாம். ஆனால் இது போன்ற ஸ்டண்ட்கள் கரணம் தப்பினால் மரணம் என்பது போல தான். 
உண்மையில் மூன்று சக்கரங்களில் ஒன்றை இவ்வளவு நேரத்திற்கு காற்றிலேயே நிறுத்திய டிரைவரின் திறன்கள் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் தான் உள்ளது.

அந்த நேரத்தில் சக்கரத்தை மாற்றுவதற்கும் கூட கண்டிப்பாக தைரியம் வேண்டும். 

இவர்களின் திறன்கள் அருமையாக இருந்தாலும், மிகவும் அபாயகர மான இந்த ஸ்டண்ட்டை பொது சாலையில் செய்வது என அவர்கள் எடுத்த முடிவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். 

அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.




Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings