சுங்க சாவடியில் இ-டோலிங் - 75 சதவீத பணிகள் நிறைவடைந்தது !

0
தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல், ‘இ-டோலிங்’ திட்டம் அமலாக உள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்எப்ஐடி - RFID



மேலும், தற்போது 75 சதவீத பணிகள் முடிவடைந் துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

வாகனங்களின் விரைவான போக்கு வரத்திற்காக நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ் சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளி களில் அமைக்கப் பட்டுள்ள டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி விட்டு செல்ல சில சமயங்கள் நீண்ட நேரமாகிறது. 
வாகன ஓட்டிகள் ரொக்கமாக செலுத்துவ தால் டோல்கேட்களில் பண பரிமாற்றத் திற்கு கூடுதல் நேரமாகிறது. அதனால், மற்ற வாகனங்களும் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி, டோல்கேட்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை தவிர்ப்பதற்காக ‘பாஸ்டேக்’ (FASTag) முறைப்படி, ஆர்எப்ஐடி (RFID - Radio-frequency Identification) சார்ந்த ‘பாஸ்டேக்’ கார்டு வாகனத்தின் விண்டுஷீல்டில் ஒட்டப்படும். 

வாகனம் டோல்கேட்டை கடக்கும் போது அதற்குரிய கட்டணம் இதிலிருந்து கழித்து கொள்ளப்படும். கட்டணம் செலுத்துவ தற்காக டோல்கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. 

சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் பயனாளர் களுக்கு என்று தனியாக ‘லேன்’ அமைக்கப்படும். பாஸ்டேக் இல்லாத மற்ற வாகனங்களைப் போல் கட்டணம் செலுத்த காத்து கொண்டிருக்க வேண்டிய தேவை யில்லை. 

இன்னும் 4 மாதங்களில் அனைத்து வாகனங் களுக்கும் ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு கட்டாயம் செய்ய இருப்பதாக கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் தகவல்கள் வெளியாயின. 

‘என்எச்ஏஐ’ எனப்படும் இந்திய தேசிய நெடுஞ் சாலைகள் ஆணைய த்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கடந்த மாதம் கடிதம் ஒன்றை எழுதி யிருந்தது.
அதில், நாட்டின் அனைத்து நெடுஞ் சாலைகளிலும் உள்ள அனைத்து டோல் லேன்களையும் பாஸ்டேக் லேன்களாக மாற்றம் செய்யும்படி வலியுறுத் திருந்ததாக தகவல்கள் வெளியாயின. 

இதன்படி வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நாட்டின் தேசிய நெடுஞ் சாலைகளில் ‘எலெக்ட்ரானிக் டோல் கலெக்‌ஷன்’ கட்டாய மாக்க வாய்ப்புள்ளது. அதற்குள், நாட்டின் அனைத்து சுங்கச் சாவடிகளும் ‘பாஸ்டேக்’ லேன்களாக மாற்றப்பட்டு இருக்கும். 
இ-டோலிங் அமக்கும்  பணி



இதனை உறுதி செய்யும் விதத்தில், நாட்டின் பல்வேறு தேசிய நெடுஞ் சாலைகளில் ‘இ-டோலிங்’ அமக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. 
இந்த நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘விரைவில் மீதமிருக்கும் டோல்களில் ‘இ-டோலிங்’ அமைக்கும் பணி முடிவடைந்து விடும். 

அதை தொடர்ந்து இன்னும் 3 முதல் 4 வாரங்களில் இ -டோலிங்கில் பணம் செலுத்தும் நடைமுறை வழக்கத்திற்கு வரும்’ என்று கூறினர். நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகள் செயல்படுகிறது. 

சுங்க கட்டணம் மூலம் சாலைகளை பராமரித்தல், இதர சேவைகள் வழங்கப் படுவதாக கூறப்பட்டாலும், அதிக பட்ச கட்டண வசூலால் மோட்டார் தொழிலில் ஈடுபட் டுள்ளோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
அதனால், சுங்க சாவடிகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், அனைத்து சுங்க சாவடிகளிலும் போதுமான சேவைகள் சரியாக வழங்கப் படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings