ராஜா குடும்பத்தின் வினோதமான உணவு பழக்கம் பற்றி சமையல்காரர் சொன்னது !

0
பொதுவாக ராஜ பரம்பரை என்றாலே தங்கத் தட்டுகளிலும் வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடுவார்கள். ராஜ போக வாழ்க்கை வாழ்கிறவர்கள் என்ற நம்பிக்கையும் பிரமிப்பும் தான் நம் எல்லோருக்குமே இருக்கும்.
ராஜா குடும்பத்தின் வினோதமான உணவு பழக்கம் பற்றி சமையல்காரர் சொன்னது !
ஆனால் என்ன தான் ராஜ பரம்பரையில் பிறந்து வளர்ந்தாலும் அவர்களுக் குள்ளும் ஒளிந்திருக்கும் சில சிறு பிள்ளைத் தனங்கள், 

சராசரி மனிதர்கள் போல் வாழ முடியா விட்டாலும் அவர்கள் செய்யும் சில விஷயங் களை முயற்சி செய்து பார்ப்பது போன்ற ஆவல்கள் இருக்கத்தானே செய்யும்.
ராஜ வம்சம்

சாதாரண மக்கள் என்ன சாப்பிடுவார்கள் என்று வேண்டுமானால் அரச குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்குமே ஒழிய அது எப்படி இருக்கும், என்ன சுவை என்று கூட தெரியாது.

அதே போலத் தான் ராஜ பரம்பரையினர் என்ன சாப்பிடுவார்கள் என்று ஆச்சர்யமும் அது நம்முடைய கனவில் உள்ள சாப்பிட முடியாத உணவு என்று மனதைத் தேற்றிக் கொண்டும் சென்று விடுவோம்.

இதை யெல்லாம் தாண்டி, நம்முடைய ராஜ வம்சத்தில் இருப்பவர்களுக்கு நம்மைப் போன்ற நிறைய வேடிக்கை யான உணவுப் பழக்கங்கள் இருப்பதாகவும் 

அது தெரிந்தால் நாமே ஆச்சர்யமும் நகைச் சுவையும் அடைவோம் என்று ராஜ வம்சத்தில் 11 ஆண்டுகள் வேலை செய்த சமையல் காரர் சில பழக்கங்க ளைப் பற்றி குறிப்பிட்டி ருந்தார். 

அதைப் பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். படிச்சு என்ஜாய் பண்ணுங்க.

யார் அந்த சமையல்காரர்?
ராஜா குடும்பத்தின் வினோதமான உணவு பழக்கம் பற்றி சமையல்காரர் சொன்னது !
ராஜ வம்சத்தில் குறிப்பாக, மன்னர், இளவரசர்கள், இளவரசிகள் என முக்கிய நபர்களுக்கு கடந்த 1982 முதல் 1993 வரையிலும் 

பர்சனல் குக்காக (சமையல் காரர்) இருந்த டேரன் மெக்கிரேடி என்பவர் தான் இந்த சுவாரஸ்யமான விஷயங்களை சில காலங்களுக்கு முன்பு பத்திரிகை யாளர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஹேரி & வில்லியம் (ராணி டயானா மகன்கள்)

பொதுவாக அரசர்கள், இளவரசர்கள் என்றால் அவர்களுடைய தட்டுகளில் இருக்கும் உணவுகள் பல ஆராய்ச்சிக்குப் பிறகு செய்யப்படும், 

அவர்களுடைய தட்டுகளில் உள்ள உணவுகள் மிகவும் ஆடம்பர மானதாக இருக்கும், சாதாரண உணவுகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்று நினைப்போம். 

ஆனால் ஹேரியும் வில்லியம்ஸ்ம் அப்படி இல்லை. அவர்களுக்கு சாதாரண அமெரிக்க குடிமகன் சாப்பிடும் உணவு பற்றியும் தெரியும். அதையும் விரும்பி சுவைப்பார்கள்.

எனக்கு நன்கு நினைவிருக்கிறது. ஒரு முறை அரசி டயானா சமைய லறைக்கு வந்தார். இன்று சிறுவர்களுக்கான (ஹேரி& வில்லியம்) மதியம் உணவு தயார் செய்ய வேண்டாம். 
ராஜா குடும்பத்தின் வினோதமான உணவு பழக்கம் பற்றி சமையல்காரர் சொன்னது !
நாள் அவர்களை வெளியே அழைத்துச் செல்கிறேன். அப்படியே மெக்டொனால் டுஸ்க்கு அழைத்துக் கொண்டு போகிறேன். அங்கேயே சாப்பிட்டு விடுவார்கள் என்று கூறினார். 

எனக்கு ஒரு நிமிஷம் பேரதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு பெரிய ராஜ பரம்பரை அங்கு போய் சாப்பிடுவதா, அதை என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியாமல் நான் சொன்னேன். 

அதே பர்கர் ஆகிய உணவுகளை நானே செய்து கொடுத்து விடுகிறேன் அரசி என்று. அதற்கு அவர் சொன்னார், 

நோ நோ அவர்களுக்கு அங்கே கொடுக்கும் அந்த பொம்மையுடன் கூடிய கவர்கள் வேண்டும். அதை வாங்கி கையில் வைத்துக் கொண்டு சாப்பிடுவது தான் அவர்களுக்கு மிகப் பிடிக்கும். 

அதனால் அங்கேயே பிட்சாவும் தோலோடு ஃபிரை செய்த உருளைக் கிழங்கும் சாப்பிட்டுக் கொள்வார்கள் என்று கூறினார். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

அரசி டயானா

அரசி டயானா உணவு விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பார். மிகவும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவார். டயட் ரொம்ப முக்கியம் என்பார். கொழுப்பு இல்லாத உணவு களையே விரும்பி சாப்பிடு வார்கள். 

ஆனால் விருந்தாளிகள் யாரேனும் அவருடன் அமர்ந்து சாப்பிடும் போது மட்டும் இந்த கட்டுப் பாடுகளை தகர்த்துக் கொள்வார். விருந்தாளி என்ன சாப்பிடுகி றாரோ அதைத் தான் இவரும் சாப்பிடுவார்.

மீன் என்றால் அரசிக்கு மிகப்பிடிக்கும். சிவப்பு இறைச்சியை தொடவே மாட்டார். ஆனால் உணவு விஷயத்தில் அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. 

அது என்ன வென்றால், பெரும்பசி. சாதாரணமாக சாப்பிடும் நேரம் தவிர சில சமயங்களில், பசி பொறுக்க முடியாமல், பெரும்பசி எடுக்கும். பின் சாப்பிட ஆரம்பிப்பார். 

ஆரோக்கி யமான உணவை மட்டுமே சாப்பிடும் அவர் ஒரு முறை பெரும்பசி எடுத்து, எனக்கு நிறைய கொழுப்பு உணவு களையும் சமைத்துக் கொடுக்கும்படி சொன்னார். எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது.

அவருக்கு மிகவும் பிடித்த உணவு என்ன தெரியுமா? ஸ்டஃடு பெல்பெப்பர் (குடை மிளகாய்) மற்றும் ஸ்டஃப்டு எக்பிளாண்ட் (கத்திரிக்காய்) தான்.
அரசர் பிலிப் & சார்லஸ்

ஒரு மனிதர் எவ்வளவு ஆரோக்கிய மாக சாப்பிடக் கூடியவராக இருந்தாலும் சுவையற்ற உணவுகளை விரும்ப மாட்டார்கள் தானே. அந்த மாதிரி தான், அரசர் பிலிப் நன்கு சுவைத்துச் சாப்பிடுவார். 

சார்லஸ் அவர்களோ பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் கொண்ட 100 சதவீதம் ஆர்கானிக் உணவை மட்டுமே சாப்பிடுவார். 

எப்போது ஷாப்பிங் போன்று வெளியில் சென்றாலும் உணவுக் கூடைகளை எடுத்துக் கொண்டு செல்வது வழக்கம். 

அப்படி ஒருமுறை உள்ளே பிலிப் மன்னர் வந்தபோது, இரண்டு கூடைகளில் உணவு எடுத்து வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்து, எதற்கு இரண்டு கூடைகள் என்று கேட்டார். 

அது முழுக்க முழுக்க ஆர்கானிக் உணவுகள் சார்லஸ்க்காக என்று சொன்னதும், அவர் என்ன ஆர்கானிக் உணவா? பிளடி ஆர்கானிக் ஃபுட் என்று சொல்லி முகத்தை சுளித்துக் கொண்டே சென்று விட்டார். 

பின்ன என்ன ரசிச்சு ருசிச்சு சாப்பிடற வருக்கு எப்படி ஆர்கானிக் உணவு பிடிக்கும். அதே போல் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவமும் உண்டு. 

ஒரு முறை மன்னர் கிச்சனுக்கு வந்தார். அப்போது மட்டன் சாப்ஸ் சமைத்துக் கொண் டிருந்தோம். 

ஆட்டுத் தொடையில் இருந்த கறிகளை வெட்டி எடுத்து விட்டு, ஓரமாக வைக்கப்பட்டிருந்த தொடையைப் பார்த்து என்ன அது என்று கேட்டார். 

உடனே நான் சொன்னேன் இது ஆட்டுத் தொடை. நம் பணியாளர்கள் சாப்பிடுவதற் காக சமைக்கப் பட்டிருக்கிறது என்று. 

ஏன் அதை நாம் சாப்பிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டே ஒன்றைக் கையிலெடுத்துச் சாப்பிட ஆரம்பித்து விட்டார். அப்புற மென்ன? மற்றொன்றை பணியாளர்கள் சாப்பிட்டார்.

எலிசபெத் ராணி
ராஜா குடும்பத்தின் வினோதமான உணவு பழக்கம் பற்றி சமையல்காரர் சொன்னது !
பொதுவாக நம்ம வீட்ல முக்கியமா ஏதாவது விஷயமா நடக்கும் போதெல்லாம் யாராவது வழக்கமாக லேட்டா தான் வருவாங்க. அது நம்ம வீடுகள்ல மட்டும் இல்ல. ராஜ குடும்பங்களில் உண்டு. 

அது வேற யாரும் இல்ல. ராணியே தான். எப்பவுமே இரவு சாப்பாட்டு க்கு எல்லாரும் வந்து ரொம்ப நேரத்துக்குப் பிறகு தான் அவங்க டைனிங் டேபிளுக்கு வருவாங்களாம். 

அதனாலேயே மற்றவர்களிடம் டின்னர் டைம் சொல்லும் நேரத்தை ராணியிடம் மாற்றிச் சொல்வது வழக்கம். 

பொதுவுாக டின்னர் டைம் 8.30 மணி என்றால், ராணியிடம் மட்டும் 8.10 என்று சொல்லி விட்டு, மற்றவர்களிடம் சரியான நேரத்தைச் சொன்னால் தான், ராணி வந்து சேருவதற்கு 8.30 ஆகி விடும்.

டப்பர்வேர் உணவு

அரச குடும்பங்களில் உள்ளவர் களுக்கு நடைமுறை வாழ்க்கைப் பற்றி தெரியவே தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக் கிறோம். 

அதே போல், அரச குடும்பங் களில் பிறந்தவர்கள் தங்கத் தட்டுக்களில் சாப்பிடுவது தான் வழக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இன்னொரு ஆச்சர்யமான விஷயத்தைச் சொல்கிறேன். 

ராணி எலிசபெத் வெளியில் செல்லும் போது, நாம் எடுத்துச் செல்கின்ற டப்பர்வேர் டப்பாக்களில் தான் உணவை எடுத்துச் சென்று சாப்பிடுவார். 

அதிலும் காலை உணவென்றால் கொஞ்சம் கெலாக்ஸ், டார்ஜிலிங் டீ அவ்வளவு தான்.
இரண்டாம் எலிசபெத்
இரண்டாம் எலிசடிபத் ராணி மிக மிக வித்தியாசமாக தான் தன்னுடைய உணவைத் தேர்வு செய்வார். இவருக் காகவே ஒரு மெனு புத்தகம் தயாரிக்கப் பட்டு வைத்திருந்தோம். 

சமைப்பதற்கு முன் அவரிடம் சென்று அந்த மெனு புத்தகத்தைக் கொடுப்போம். அதில் அவர் தேர்வு செய்யும் உணவையே அவருக்கு வழங்குவோம்.

அரசுக்கு சொந்தமான எஸ்டேட்டுகளில் இருந்து தயாரிக் கப்படும் உணவை விரும்பிச் சாப்பிடுவார். ம். சொல்ல மறந்துட்டேன். ராணிக்கு மிகவும் பிடித்தது என்ன தெரியுமா? 

டார்க் சாக்லேட். அந்த வயதிலும் சின்ன குழந்தை போல சாக்லேட்டை விரும்பிச் சாப்பிடுவதைப் பார்த்து நாங்கள் பலமுறை ரசித்திருக் கிறோம் என்று கூறினார் அந்த சமையல்காரர்.

அழகான ஆடைகள்

ராஜ வம்சத்தில் இரவு உணவுக்கு எல்லோரும் ஒன்றாகக் கூடும் பொழுது, நிச்சயமாக நன்கு சிறப்பாக ஆடைகளை உடுத்தி, முழு அலங்கார த்தோடு தான் வர வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)