இன்று சுத்தமான சுவையான உணவு சாத்தியமே இல்லையா?





இன்று சுத்தமான சுவையான உணவு சாத்தியமே இல்லையா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
உணவே மருந்து என்கிற நிலை மாறி, இன்று உணவே விஷம் என்கிற அபாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். எதிலும் கலப்படம்... எங்கும் கலப்படம்... மிளகாய் பொடியில் செங்கல் தூள்... 
இன்று சுத்தமான சுவையான உணவு சாத்தியமே இல்லையா?
மிளகுத் தூளில் அரிசி மாவு... டீ தூளில் சாயம்... இன்னும் குடிக்கிற தண்ணீரில் தொடங்கி, சுவாசிக்கிற காற்று வரை எல்லாவற்றிலும் கலப்படம்.

சுத்தமான உணவு சாத்தியமே இல்லையா என்கிறவர்களுக்கு சுத்தமான, சுவையான உணவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் லலிதா ராவ் சாஹிப். 

உடுப்பி ருசி என்கிற பெயரில் வரும் இவரது உணவுத் தயாரிப்புகள் உடனடியாக சில நொடிகளில் ரெடி ஆகி உங்கள் பசி ஆற்றக் கூடியவை. பொதுவாக ரெடி டூ ஈட் அல்லது ரெடி டூ குக் என்கிற
கரியமில வாயு இல்லாத கட்டுமானப் பொருள் !
அறிவிப்புகளுடன் வரும் உணவுகளில் ரசாயனக் கலப்பு கட்டாயம் இருக்கும். லலிதாவின் தயாரிப்புகளில் செயற்கையான ப்ரிசர்வேட்டிவ்களோ, நிறமிகளோ கிடையாது என்பது தான் சிறப்பு.
மெக்கானிக்கல் இன்ஜினியரான லலிதா, உணவுப் பொருள் தயாரிப்புக்கு வந்தது எப்படி? எங்கப்பா ஏற்கனவே உணவுப் பொருள் தயாரிப்புத் துறையில இருந்தவர்.

அவர் நல்லா சமைப்பார். அதனால எனக்கும் நல்ல சாப்பாடு பிடிக்கும். என்னோட கணவர் வேலை பார்த்த கம்பெனிக்கு வரும் வெளிநாட்டு அதிகாரிகள் எல்லாரும்,

நம்ம சாப்பாட்டை சாப்பிட்டு, 2020ல இந்தியா தான் கிச்சன் ஆஃப் தி வேல்டுனு பேர் வாங்கப் போகுது... உங்க சாப்பாடு அவ்வளவு சூப்பர்’னு பாராட்டுவாங்க.

அப்பவே உணவு சம்பந்தமான துறையில இறங்கற ஐடியா இருந்தது. ஒரு முறை மும்பை போயிருந்தப்ப அங்க பாவ் பாஜி சாப்பிடலாம்னு ஒரு கடைக்கு போனோம். 

மும்பை தான் பாவ் பாஜிக்கு ஃபேமஸ். ஆனா, அந்தக் கடையில பாவ் பாஜி மாஸ்டர் லீவுனு அன்னிக்கு பாவ் பாஜியே இல்லைனு சொல்லிட்டாங்க. அப்ப இன்னொரு ஐடியா தோணினது. 
இன்று சுத்தமான சுவையான உணவு சாத்தியமே இல்லையா?
எல்லா ஹோட்டல்களும் ஒவ்வொரு அயிட்டத்துக்கும் ஒரு குக்கை சார்ந்துதான் இருக்க வேண்டியிருக்கு. அவங்க இல்லைனா ஹோட்டல்கள் பாடு ரொம்பக் கஷ்டம்.

இந்த நிலைமையை மாத்தி, குக் இல்லாமலேயே யார் வேணா, எந்த அயிட்டத்தை வேணா சமைக்கிற மாதிரி ஒரு தயாரிப்பை ட்ரை பண்ணினா என்னனு யோசிச்சேன்.

இன்னொரு பக்கம் பரபரப்பான வாழ்க்கையில சிக்கி, பாரம்பரிய உணவுகளையே மக்கள் மறந்துக் கொண்டிருக்கிறார்கள். 

இட்லி, தோசைனு நம்ம பாரம்பரிய உணவுகள் தான் ஆரோக்கியமானவைனு தெரிஞ்சாலும் அதை முறைப்படி வீட்லயே தயாரிச்சு சாப்பிட நேரமோ, பொறுமையோ இருக்கிறதில்லை. 
ஆரோக்கியத்துக்கும் சோம்பேறித் தனத்துக்குமான போட்டியில சோம்பேறித்தனம் ஜெயிச்சிடுது. பன்னாட்டு கம்பெனிகளோட சதிக்கு பலியாகறோம்.

பீட்சாவையும் பர்கரையும் சாப்பிட்டு பசியை ஆத்திக்கறோம். இப்படியே போனா அடுத்த தலைமுறைக்கு இட்லி, தோசைங்கிற துகூட மறந்து போனாலும் ஆச்சரிய மில்லைனு தோணினது. 

இப்படி என் மண்டையைக் குடைஞ்ச எல்லா விஷயங்களையும் வச்சு ஆரோக்கியமான, அதே நேரம் அதிக வேலை தேவைப்படாத உணவுகளை அறிமுகப்படுத்த நினைச்சேன். கிட்டத்தட்ட 12 வருஷப் போராட்டம் அது. 

நிறைய நிறைய முயற்சிகள்... நிறைய நிறைய பரிசோதனைகள்னு பல வருஷங்களுக்குப் பிறகு தான் எனக்கு அது சாத்தியமாச்சு... என்கிற லலிதா, 

தனது உடுப்பி ருசி பேனரின் கீழ் 97 வகையான ரெடி டூ குக் உணவுகளை அறிமுகப்படுத்தி யிருக்கிறார்.

பத்தே நிமிடங்களில் இட்லி, தோசை முதல் பன்னீர் பட்டர் மசாலா, பாவ் பாஜி வரை விருந்தே சாப்பிடலாம் இவற்றை வைத்து!

உணவுப் பொருள் கெடாமலிருக்க செயற்கையான கெமிக்கல் எதுவும் கிடையாது என்கிற உத்தரவாதத்தை அழுத்திச் சொல்கிறார் லலிதா. 

அதெப்படி சாத்தியம்? அந்தக் காலத்துல வத்தல், வடாம் போட்டு, வருஷக் கணக்கா பத்திரப்படுத்தி வைப்போமே...

அதே டெக்னிக்தான். Dry Blend Technology ங்கிற முறையில, உணவுப் பொருட்கள்ல உள்ள ஈரப்பதத்தை நீக்கிடறோம். 
இன்று சுத்தமான சுவையான உணவு சாத்தியமே இல்லையா?
எந்த ஒரு உணவுலயும் 35 சதவிகிதம் வரைக்கும் ஈரப்பதம் இருக்கும். அதை 3 சதவிகிதத்துக்குக் கொண்டு வந்துட்டா கெட்டுப் போகாது.

அதே போல கடுகு, மஞ்சளோட எக்ஸ்ட்ராக்ட்டுனு சில இயற்கையான ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கிறது இன்னொரு காரணம். எங்களோட இந்தத் தயாரிப்புகளை வீட்ல உள்ளவங்களும் உபயோகிக்கலாம். 

ரெஸ்டாரன்ட்டுகளுக்கும் சப்ளை பண்றோம். பெரிய பெரிய ரெஸ்டாரன்ட்டுகள் எல்லாம் எங்களோட தயாரிப்புகளை தான் உபயோகிக்கிறாங்க.

இந்தியாவுல உள்ள பெரும்பாலான உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவுக்குள்ள ஒரு தரத்துலயும், எக்ஸ்போர்ட் செய்ய வேற ஒரு தரத்துலயும் பொருட்களைத் தயாரிப்பாங்க.
நாங்க அந்த விஷயத்துல விட்டுக் கொடுக்காம, இந்தியாவுக்குள்ள யும் எக்ஸ்போர்ட்டுக்கும் ஒரே தரத்தைத் கடைப்பிடிக்கிறோம். 

இந்த தயாரிப்பு யூனிட்டில் 140 பெண்கள் வேலை பார்க்கிறார்கள். எங்களோட புரொடக்‌ஷன் யூனிட்டுக்கு Nuthatchனு பேர் வச்சேன். 

அது 7 செ.மீ. நீளமே உள்ள ஒரு குட்டிப் பறவை இனம். ஆனா, அதோட அலகு தேங்காயையே உடைக்கிற அளவுக்கு அவ்வளவு ஸ்ட்ராங்.
இன்று சுத்தமான சுவையான உணவு சாத்தியமே இல்லையா?
அது மாதிரி எங்களோட நிறுவனம் சின்னதா இருந்தாலும், அது கொடுக்கிற தரமும் திருப்தியும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்னு சொல்லத்தான் அந்தப் பேர்...’’ என்கிறார். 

ஏற்கனவே வெளிநாடுகளிலும் தனது பொருட்களைக் கொண்டு சேர்த்து விட்ட லலிதாவுக்கு பெரிய கனவு ஒன்று இருக்கிறது. அது... கிச்சனே இல்லாத வீடு! கனவு நனவாகட்டும்!

பீட்சாவையும் பர்கரையும் சாப்பிட்டு பசியை ஆத்திக்கறோம். இப்படியே போனா அடுத்த தலைமுறைக்கு இட்லி, தோசைங்கிறது கூட மறந்து போனாலும் ஆச்சரியம் இல்லை!
எந்த ஒரு உணவுலயும் 35 சதவிகிதம் வரை ஈரப்பதம் இருக்கும். அதை 3 சதவிகிதத்துக்குக் கொண்டு வந்துட்டா கெட்டுப் போகாது.... நன்றி - குங்குமம்.
Tags: