இஸ்ரோ நிறுவனத்தை பாராட்டிய நாசா !

0
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதை யடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது.
இஸ்ரோ நிறுவனத்தை பாராட்டிய நாசா



400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கிய தாகவும் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் வரவில்லை எனவும், 

2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது லேண்டரின் தகவல் துண்டிக்கப்ப ட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானி களுக்கு ஆறுதல் கூறும் வகையில் உரை யாற்றினார். இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நிலவில் தரை யிறங்கும் இஸ்ரோவின் முயற்சிக்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாசா வெளி யிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விண்வெளி ஆய்வு மிகவும் கடினமானது. நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். 

எதிர்கால திட்டங்களில் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings