நேபாளத்தில் டெங்குவிற்கு 2,559 பேர் பாதிப்பு !

0
ஆசிய நாடுகள் பலவற்றிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நேபாளத்தில் ஒரே வாரத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டிருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.
டெங்குவிற்கு 2,559 பேர் பாதிப்பு




பருவமழைக் காலம் என்பதால் கொசுக்கள் மூலமாகப் பரவும் டெங்குவின் தாக்கம் இம்முறை அதிகப் படியாகவே உள்ளது. கொசுக்களில் ஏடிஸ் வகை கொசுக்களே இந்த டெங்கு வைரஸை பரப்பும் வேலையில் உள்ளன. 
இவ்வகை கொசுக்கள் மூலம் வைரஸ் பரவினால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், தசை மற்றும் மூட்டு வலி, தோல் பிரச்னை ஆகியன ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 3 பேர் நேபாளத்தில் உயிரிழந் துள்ளனர். ஒரே வாரத்தில் 2,559 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் நேபாளத்தில் மக்கள் மத்தியில் பெரும் பயம் ஏற்பட்டுள்ளது. 




பல தடுப்பு முயற்சிகள் எடுக்கப் பட்டாலும் பிரச்னையின் வீரியம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கொரிய நிறுவனம் ஒன்றின் உதவியோடு காத்மண்டு முழுவதும் தடுப்பு மருந்து அடிக்கும் பணி அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது. நேபாளத்தி லேயே அதிக பட்சமாக மக்வான்பூர் பகுதியில் 546 பேர் டெங்குவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)