ஜெட் கடலில் விழுந்ததில் விமானி உயிரிழப்பு !

0
ஸ்பெயின் நாட்டில், ராணுவ ஜெட் விமானம், கடலில் விழுந்ததில் விமானி ஒருவர் உயிரிழந்தார். 
ஜெட் கடலில் விழுந்ததில் விமானி உயிரிழப்புஅந்நாட்டின் தென்கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள லா மங்கா என்ற கடல் பகுதியில் சி-101 என்ற பயிற்சி விமானம், வானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.

இந்த விபத்தில் விமானத்தை ஓட்டி சென்ற ராணுவ பயிற்றுவிப்பாளர் உயிரிழந்த தாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சேதமடைந்த விமானத்தின் பாகங்கள் கரை யொதுங்கியதை அடுத்து, அங்குள்ள 3 கடற்கரை யோரங்களில், சுற்றுலா பயணிகள் சூரிய குளியல் இட தடை விதிக்கப் பட்டுள்ளது.

அண்மையில் மல்லோர்கா தீவில் வானில் பறந்த ஹெலிகாப்டரும்- விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக் குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

அடுத்தடுத்து நடந்த இரு சம்பவங்கள் குறித்து குழப்ப மடைந்துள்ள அதிகாரிகள் அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்து கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings