இத்தனை கோடி டன் பனிப்பாறைகள் ஒரே நாளில் உருகிய அதிர்ச்சி தகவல் !

0
அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் உள்ள பனிமலைகள் மிகவும் வேகமாக உருகி வருகின்றன. 
இத்தனை கோடி டன் பனிப்பாறைகள் ஒரே நாளில் உருகிய அதிர்ச்சி
அதுவும் கடந்த 25 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் 7.5 செ.மீ. உயர்ந்துள்ள தாக நேஷனல் அகாடமிக்ஸ் ஆஃப் சயின்ஸ் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது.

இது குறித்து கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்த செயற்கோள்கள் அளித்த தகவல்கள் இதனை உறுதி செய்திருந்தன. 
கடல் நீர்மட்டம் 20-ம் நூற்றாண்டு க்கு முன்பு வரை நிலையாக இருந்தது. 

அதன்பின் உலக வெப்பமய மாதலின் விளைவால் பனிப்பாறைகள் உருகி நீர்மட்டம் தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் தற்போது கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகளில், 24 மணி நேரத்தில் 1100 கோடி டன் உருகி கடல் நீர்மட்டம் அதிகமாகி யுள்ளதாக அதிர்ச்சி யளிக்கும் தகவலை ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.
கிரீன்லாந்தில் உருகிய பனிப்பாறைகள்
இது குறித்து நாசா கூறுகையில், ‘கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் மிகப்பெரிய உருகும் நிகழ்வுக்கு தயாராக உள்ளன. 

பில்லியன் டன்களில் உருகும் நீர் அட்லாண்டிக் கடலில் கலப்பதால் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்து காணப் படுகிறது.
அதிக வெப்பத்தின் காரண மாகவே, அதிக அளவில் பனிக்கட்டிகள் உருகியுள்ளன. எதிர் காலத்தில் இன்னும் மோசமான நிலையை சந்திக்க நேரிடும்’ என எச்சரித்து கூறியுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)