முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் !

0
மாநிலங் களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் தடை மசோதா நேற்று நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.
முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்



உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை கிரிமினல் குற்றமாக்க வழிசெய்யும் மசோதா எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பு களுக்கு மத்தியில் பாராளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. 

மாநிலங்க ளவையில் ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும், இந்த மசோதா நிறைவேறியது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் முத்தலாக் தடை மசோதா பாராளுமன் றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதை யடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து முத்தலாக் தடைச் சட்டம் அரசாணையும் வெளியிடப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings