மன்னிப்பு கேட்க மாட்டோம் ,சிறை செல்வோம் - நந்தினி !

0
‘சமூகப் பிரச்னைகளுக் காகப் போராடினால், சிறைத் தண்டனை தான் பரிசாகக் கிடைக்குமா?’ என்று வேதனை பொங்க கேள்வி எழுப்பு கின்றனர் சமூக ஆர்வலர்கள். 
மன்னிப்பு கேட்க மாட்டோம்



டாஸ்மாக் கடைகளை மூடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்னைகளுக் காகப் போராடியதன் தொடர்ச்சியாக, நந்தினி, அவரின் தந்தை ஆனந்தன், தங்கை நிரஞ்சனா ஆகியோர் வெவ்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி நந்தினியும் அவரின் தந்தை ஆனந்தனும் துண்டுப் பிரசுரம் கொடுக்க முற்பட்டனர். அதை அனுமதிக்காத போலீஸார், தங்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப் பதிவு செய்தனர். 

அந்த வழக்கு, கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திருப்பத்தூர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.பி.சி 328 சட்டம் குறித்துப் பல்வேறு கேள்விகளை நீதிபதியிடம் எழுப்பினார் நந்தினி. அதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் கொடுத்தப் புகாரின் பேரில், நந்தினி மற்றும் ஆனந்தன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப் பட்டது. 
மன்னிப்பு கேட்டால், சொந்த ஜாமீனில் விடுவதாக நீதிமன்றம் அறிவித்தும், அதற்கு நந்தினியும் ஆனந்தனும் ஒப்புக் கொள்ள வில்லை. அதனால், சிறையில் அடைக்கப் பட்டனர். ஜூலை 5-ம் தேதி நந்தினிக்குத் திருமணம் நடக்கவிருந்த நிலை யில், இந்தக் கைது சம்பவம் அரங்கேறிய தால், பரபரப்பான விஷயமாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில்தான் ஜூலை 8-ம் தேதி அடுத்த கைது சம்பவம் நடந்தது. நந்தினி மற்றும் ஆனந்தன் கைது செய்யப் பட்டதை எதிர்த்து, மதுரை சட்டக்கல்லூரி முன்பு காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார், நந்தினியின் தங்கை நிரஞ்சனா. 

சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பயின்று வரும் நிரஞ்சனா, அறிவித்தபடி ஜூலை 8-ம் தேதி போராட்டத் தில் இறங்கத் தயாரான போது, முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக மதுரை தல்லாகுளம் போலீஸாரால் கைது செய்யப் பட்டார்.

கைது செய்யப் படுவதற்கு முன்னதாக, மதுரை புதூரில் உள்ள வீட்டில் நிரஞ்சனாவைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

நந்தினியைப் பிணையில் எடுப்பதில் என்ன பிரச்னை?

ஐ.பி.சி 328-ன்படி டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமா இல்லையா எனக் கேள்வி கேட்டதற்காக இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். இனிமேல் இப்படி கேள்விகளைக் கேட்கக் கூடாது என உத்தரவாதம் கொடுத்தால் தான் ஜாமீன் என்றார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், நாங்கள் ஜாமீன் கோரவில்லை.

மன்னிப்பு கேட்க மாட்டோம்... சிறை செல்வோம்

நீதிபதியிடம் நந்தினி மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாகவும் நீதிமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் வகையில் செயல் பட்டதாகவும் திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கம் தெரிவித்துள்ளது. விளம்பரத்துக் காகத்தான் நந்தினி இப்படி நடந்து கொண்டார் என வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித் துள்ளார்களே?

சட்டப் பிரிவைப்பற்றி நீதி மன்றத்தில் கேட்காமல் வேறு எங்கு கேட்பது? சாமானிய மக்களே நீதிமன்றத்தில் சட்டப்படி கேள்வி எழுப்பலாம். ஐ.பி.சி 328 சட்டப்படி, போதைப் பொருள் விற்பது கடுமையான குற்றம். 
மன்னிப்பு கேட்க மாட்டோம் ,சிறை செல்வோம்



ஒருவர் உடலுக்குக் கேடு விளைவிக்க வேண்டும் என்று தெரிந்தே போதைப் பொருளைக் கொடுத்தால், இந்தச் சட்டப்படி அது குற்றம். இந்தக் குற்றத்தைச் செய் வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே போதைப் பொருளை விற்பனை செய்கிறது அரசு. 
சட்டப்படி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். போதைப் பொருள் விற்கும் ஆட்சி யாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அதைச் செய்யாமல் அந்தச் சட்டம் பற்றி விளக்கம் கேட்டவர் களைச் சிறையில் தள்ளுகிறார்கள். 

அரசாங்கமே போதைப் பொருள் விற்பனை செய்வது குற்ற மில்லையா?’ எனக் கேட்டது நீதி மன்றத்துக்கும் ஆட்சியாளர் களுக்கும் அச்சுறுத்த லாக இருக்கிறது போல. அரசாங்கத்துக்கு ஆதரவாகத் தான் நீதி மன்றமும் செயல் படுகிறது.

ஜாமீன் வேண்டி உயர் நீதிமன்றத்தில் மனு செய்வீர்களா?

அங்கும் மன்னிப்பு கேட்கச் சொல்வார்கள், அரசாங்கம் மது விற்பதற்கு எதிராகப் பேசக்கூடாது என்பார்கள். அதனால், மனு செய்ய வில்லை. சிறை செல்வோம். சட்டப்படி நடப்பதை எதிர் கொள்வோம்.

நந்தினியின் திருமணம் தடைப்பட்டது பற்றி வருத்தமா?

அதைப் பற்றியெல்லாம் கவலை யில்லை. மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் தொடர்ந்து போராடி வருகிறோம். சிறையி லிருந்து வந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக நந்தினி கூறியுள்ளார்.

உங்களை வேறு யாரோ இயக்குவதாகச் சொல்லப் படுகிறதே?

எங்களுக்குப் பின்னால் யாரும் இல்லை. எங்களுக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மீது நம்பிக்கை இல்லை. அதனால் தான் சுயமாகப் போராடு கிறோம். எங்களை எப்போதும் காவல்துறை கவனித்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் எங்களுடன் சேர்ந்து மக்கள் போராட வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.’’



“இளம் வயதில் அரசுக்கு எதிரான போராட்டங்கள், வழக்கு, கைது என்று தொடர்வதைக் குடும்பத்தில் எப்படிப் பார்க்கிறார்கள்? ‘’
குடும்பத்தினர் ஆதரவுடன், எங்கள் மனதுக்கு நியாயம் என்று படுவதால் தான் போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டத்தில் எங்கள் தந்தை உடன் இருக்கிறார். இதில் எந்த உள்நோக்கமோ, வருத்தமோ இல்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings