ஷீலா தீட்சித் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி இரங்கல் !

0
மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியில் தான், டெல்லியில் நினைவு கூறத்தக்க மாற்றங்கள் நடந்தது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இருதய கோளாறால் பாதிக்கப் பட்டிருந்த டெல்லி முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.
ஷீலா தீட்சித் மறைவுக்கு ராம்நாத், மோடி இரங்கல்




அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஷீலா தீட்சித்தின் மறைவு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் செய்தி வெளி யிட்டுள்ளார். 
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லியின் முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் பிரமுகருமான திருமதி ஷீலா தீட்சித் மறைவை கேட்டு வருத்தமாக உள்ளது. அவர் பதவியில் இருந்த காலம் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது. 



அதற்காக அவர் என்றும் நினைவில் வைக்கப் படுவார். அவரது குடும்பத்தின ருக்கும் நண்பர்களு க்கும் இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ஷீலா தீட்சித் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். 
தேசியகொடி ஏற்றும்போது பூக்கள் வைப்பது ஏன்?
அவர் அன்பு மற்றும் ஆளுமை போன்ற குணங்களால் ஆசிர்வதிக்கப் பட்டவர். தலைநகர் டெல்லியின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி யுள்ளார். அவரது குடும்பத்தின ருக்கும் ஆதரவாளர் களுக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி என கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings