கொஞ்ச நாளாக நான் நானாகவே இல்லை - நிர்மலா தேவி !

0
சில நாள்களாக நான் நானாகவே இல்லை. தயவு செய்து என்னை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்'', என நிர்மலாதேவி பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
கொஞ்ச நாளாக நான் நானாகவே இல்லை



விருதுநகர் மாவட்டம், அருப்பு கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். 
அவரோடு முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். தற்போது இவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த திங்கள் கிழமை நீதி மன்றத்துக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி மனநலம் பாதிக்கப் பட்டவர் போல நடந்து கொண்டார். பின்னர் அருப்பு கோட்டையில் உள்ள தர்காவிலும் அதே போல நடந்து கொண்டார். பின்னர் காவல் துறையினர் அவரை வீட்டில் கொண்டு போய் சேர்த்தனர்.
நிர்மலா தேவி ஆடியோ



இந்த நிலையில், தனக்குத் தெரிந்த ஒருவரிடம் அவர் பேசியது போன்று ஆடியோ ஒன்று சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. சார், நேற்று ஏதாவது கோபமாக பேசியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். கொஞ்ச நாளாக நான் நானாகவே இல்லை. 

ஆன்மிக ரீதியாக இப்படி நடக்கிறதா எனத் தெரிய வில்லை. ரொம்ப கஷ்டமாக உள்ளது. 2 நாளுக்கு முன் தஞ்சாவூரில் தெரிந்தவர் வீட்டுக்குச் சென்று மனநல மருத்துவரைப் பார்த்தேன். இப்போது தினம் ஒரு கூத்து நடக்கிறது. மதுரையில் உங்களுக்குத் தெரிந்த மனநல மருத்துவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். 
தினம் பெரிய பிரச்னை வருகிறது. இப்போது கூட நான் தயாராக உள்ளேன் என பேசுகிறார். எதிர் முனையில் பேசிய அந்த நபர், திருநெல்வேலி யில் உள்ள மருத்துவ மனைக்கு உங்களை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருந்தோம். என் மனைவி கடும் மன அழுத்தத்தில் இருந்தார். 
நான் நானாகவே இல்லை - நிர்மலா தேவி



அங்கே தான் என் மனைவிக்கும் சிகிச்சை அளித்தேன். இப்போது நன்றாக உள்ளார். நீங்கள் என்னை பேசவே விடாததால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது மீண்டும் பேசிவிட்டு அழைக்கிறேன்' என்கிறார்.
அதற்குப் பதிலளிக்கும் நிர்மலாதேவி, `உடனே பேசி விட்டு மதுரையோ அல்லது திருநெல்வேலிக்கோ என்னை தயவு செய்து அழைத்துச் செல்லுங்கள்'' எனக் கூறி முடிக்கிறார். இந்த ஆடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

கடந்த சில நாள்களாவே நிர்மலாதேவி தனக்கு சாமி வந்ததாகவும், வாக்கு கொடுத்த தாகவும், தனக்கு எதிரானவர்கள் இறந்து விட்டதாகவும் ஏதேதோ பேசியும், செய்தும் வருகிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)