தெரு முனையில் குளித்து குடிசையில் வாழும் மத்திய மந்திரி !

0
பிரதமர் மோடி உள்பட 58 பேர் நேற்று மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர். 42 வயது முதல் 71 வயது வரை இளமையும், அனுபவமும் கொண்ட கலவையான அமைச்சரவை யாக மோடியின் புதிய அமைச்சரவை அமைந்து உள்ளது. மத்திய மந்திரிகள் 58 பேரில் நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருப்பவர் பிரதாப் சந்திர சாரங்கி. 64 வயதாகும் இவர் ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில் உள்ள கோபிநாத்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்.
குடிசையில் வாழும் மத்திய மந்திரி


ஏழை பிராமணர் ஆன இவர் 1975-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தார். சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் கொண்ட இவர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து ஏழை -எளியவர் களுக்கு தேவையான சமுதாய பணிகளை செய்து வந்தார். திருமணம் செய்து கொள்ளாத இவர் ஏழைகளுக் காக பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் துறவி ஆக ஆசைப்பட்டார். 
இதற்காக மேற்கு வங்காளத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடம் தலைமை அலுவலகத்து க்கு சென்றார். ஆனால் அங்கிருந்த வர்கள் வயதான விதவை தாயை கவனிக்குமாறு சொல்லி திரும்பி அனுப்பி விட்டனர். இதனால் அவர் ஒடிசா திரும்பினார். மண் சுவர் கொண்ட குடிசையில் வாழ்ந்து வரும் இவர் மிகவும் எளிமையான வாழ்க்கை முறைகளே மேற்கொண்டுள்ளார்.

தனது குடிசை வீட்டுக்கு முன்பு தெருவோர பைப்பில் தான் குளித்துக் கொள்கிறார். மலைவாழ் மக்களுக்காக பலாசூர், மயூர்கஞ்ச் மாவட்டங் களில் ஏராளமான பள்ளிக் கூடங்களை தொடங்கி உள்ளார். ஏழ்மை, சேவை மற்றும் மக்கள் நலனில் கொண்ட அக்கறை காரணமாக இவரை ஒடிசா மாநில மக்கள் “ஒடிசாவின் மோடி” என்று செல்லமாக அழைக்கி றார்கள். 

இவர் 2004 முதல் 2009 வரையும், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையும் நீலகிரி சட்டசபை தொகுதியில் இருந்து தேர்வாகி எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2014-ம் ஆண்டு பலாசூர் பாராளுமன்ற தொகுதியிலும் அவர் போட்டி யிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்க வில்லை. தற்போது மீண்டும் அவர் அதே தொகுதியில் போட்டி யிட்டார். அவருக்காக பிரதமர் மோடி பிரத்யேகமாக சென்று பலாசூர் பகுதியில் பிரசாரம் செய்து விட்டு வந்தார். 
இதன் காரணமாக சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதாப் சந்திர சாரங்கி வெற்றி பெற்றுள்ளார். சொந்தமாக கார் கூட இல்லாத இவர் தேர்தல் பிரசாரத்துக்கு பெரும்பாலும் சைக்கிளிலேயே சென்று வந்தார். இவர் மீது அனுதாபப்பட்டு எம்.பி. ஆக்கியுள்ளனர். பாராளுமன்ற த்துக்கு தேர்வான முதல் தடவையே மந்திரியாக வும் உயர்ந்துள்ளார்.

ஒடிசாவில் இருந்து டெல்லிக்கு வந்த அவர் வழக்கம் போல தனது ஜோல்ணா பையுடன் தான் வந்திருந்தார். அவர் எளிமையை கண்டு மற்ற தலைவர்களும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டு போனார்கள். அவரது டெல்லி பயண காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. நேற்று அவர் மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட போதும் கூட புதிய உடைக்கு மாறவில்லை. 

தனது எளிமையான உடையிலேயே வந்து பதவி ஏற்றார். அதனால் தான் அவர் பதவி ஏற்க வந்த போது வாழ்த்து கோ‌ஷமும், கரகோ‌ஷமும் அதிகமாக இருந்தது. அவர் பதவி ஏற்று முடித்ததும் மற்ற சக மந்திரிகள் அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். பலாசூர் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜு ஜனதா தள வேட்பாளர் ரவீந்திர குமார் ஜனா மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார். 

பணப்பலத்தை மீறி பிரதாப் சந்திர சாரங்கி வெற்றி பெற்றுள்ளார். மிகச்சிறந்த பேச்சாளரான சாரங்கி ஆன்மீக தொடர்பாக பேசுவதில் வல்லவர். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஒடியா ஆகிய 4 மொழிகளில் சரளமாக பேசும் இவர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஆவார். இவர் மீது இரக்கம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இவரது தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்டோ ஒன்றை கொடுத்தது.

மற்றபடி வேறு யாரிடமும் இவர் எந்த உதவியையும் பெறவில்லை. உண்மை யிலேயே மலைவாழ் மக்களுக்காக பாடுபட்ட இவர் இன்று ஏழ்மை நிலையில் இருந்து மந்திரியாக வந்துள்ளார். இவர் இதுவரை வருமான வரி கட்டியது இல்லை. 
பிரதாப் சந்திர சாரங்கி


பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட இவர் தனது வேட்பு மனுவில் வரி கட்டும் அளவுக்கு தனக்கு வருமானம் இல்லை என குறிப்பிட்டு இருந்தார். என்றாலும் பான் கார்டு எடுத்து வைத்துள்ளார். இவரது பெயரில் வங்கிகளிலோ, தபால் அலுவல கத்திலோ சேமிப்பு கணக்கு இல்லை. அது போல இவரது பெயரில் வாகனங்கள், வீடுகள், நிலங்கள் என்று எதுவும் கிடையாது. 
மூதாதையர் களுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை இவர் பயிரிட்டு அனுபவித்து வருகிறார். அந்த வகையில் தனக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட் டுள்ளார். 2009-ம் ஆண்டு இவர் நீலகிரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட கட்சி மேலிடம் டிக்கெட் வழங்கி இருந்தது. 

அந்த டிக்கெட்டுடன் பஸ்சில் வந்து கொண்டிருந்த போது வேட்பாளருக் கான அங்கீகார டிக்கெட்டை தொலைத்து விட்டார். இதனால் அவர் நீலகிரி சட்டசபை தொகுதியில் சுயேட்சை யாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். எளிமை ஒன்றே இவரை மாநிலம் கடந்து நாடு முழுவதும் மக்களிடம் பேச வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings