கையில் பணம் இருந்தால் பறித்து கொள்வார்களா? - ஜாக்கிரதை !

0
தமிழகம் முழுவதும் கடந்த26 நாட்களில் நடைபெற்ற வாகன பரிசோதனை யில் பணம் தங்கம், வெள்ளி மற்றும் பரிசுப் பொருட்கள் என இது வரையில் ரூ.215-கோடி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. 
கையில் பணம் இருந்தால் பறித்து கொள்வார்களா
இது தேர்தல்வரை தொடர்வதற்கு வாய்ப்புள்ளது. இந்தியா விலேயே தமிழகத்தில் தான் இது அதிகம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எல்லாம் சரிதான். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நாட்களில் தனிநபர் அதிக பட்சம் ரூ.50 ஆயிரம் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லலாம் என்பது தேர்தல் விதி. 

தலைமைத் தேர்தல் கமிஷனர், மாநில தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரி வரை இந்த விதிகளை வலியுறுத்து கிறார்கள்.

ஆனால் பறக்கும் படையில் உள்ள அதிகாரிகள் எல்லாம் இந்த விதிகளைக் கண்டு கொள்வதே இல்லை. 

கையில் பணம் இருக்கிறதா என்று சோதனை போட்டு அது எவ்வளவு என்பதை கூட கவனிக்காமல், வழிப்பறி ஸ்டைலில் பறிமுதல் செய்து வருகின்றனர். 

இது குறித்து வர்த்தகர் அமைப்புகளும், பொது மக்களும் தேர்தல் ஆணையத்தின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
மதுரையில் நடந்து சென்ற மாட்டு வியாபாரியை சோதனை செய்த பறக்கும் படை அதிகாரிகள், அவரிடம் இருந்து 24 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். 

பேத்தி காது குத்து விழாவுக்காக நகை வாங்கச் சென்ற பெரியவரிடம் சோதனை செய்து அவரிடம் இருந்து 28 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டனர்.

தொழிலாளர் களுக்கு சம்பளம் தருவதற்காக சைக்கிளில் சென்ற கொத்தனாரை வழிமறித்து அவரிடம் இருந்த 18 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். 
ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்லலாம் என்ற தேர்தல் கமிஷன் விதிகளை அவர்கள் கருத்தில் கொள்வது இல்லை. 

பணத்தை பறிமுதல் செய்வதில் குறியாக உள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings